#BREAKING ஐபிஎல் 2026: தோல்வியே இல்லை! டெல்லியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து அசத்தல்!

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லியை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் அணி.
Punjab team
Punjab teamimage credit-sportstar.thehindu.com
Updated on

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் இன்று லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக பஞ்சாப் வலம் வருகிறது. டெல்லி அணி விளையாடிய 6 போட்டிகளில் 3 வெற்றி பெற்றுள்ளது.

தனது வீறுநடையை தொடர பஞ்சாப் அணி தீவிரம் காட்டும் அதேநேரத்தில் தோல்வியில் இருந்து மீண்டு பஞ்சாப்பின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க டெல்லி அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த போராடும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இரு அணிகளுமே தலா 17-ல் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து மெகா இலக்கான 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி, பொறுமையாக விளையாடி இறுதியில் டெல்லி அணியின் மெகா ரன் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் போட்டியில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம் வருகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com