சென்னை அணியின் பந்து வீச்சில் டெல்லி அணி க்ளீன் போல்ட்!

சென்னை அணியின் பந்து வீச்சில் டெல்லி அணி க்ளீன் போல்ட்!

டைபெற்றுவரும் 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் மற்றும் கான்வே ஆட வந்தனர். நிதானமாகத் தொடங்கப்பட்ட ஆட்டத்தில் சென்னை அணியின் ஸ்கோர் 32 என்று இருந்தபோது, அக்ஸர் படேல் பந்து வீச்சில் கான்வே 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதையடுத்து, ருதுராஜ் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மறுபடியும் அக்ஸர் படேல் பந்து வீச்சிலேயே அவுட் ஆனார். இதனால் எதிர்பார்த்தபடி அதிக ஸ்கோர் செய்ய முடியாமல் சென்னை அணி திணறியது.

அதையடுத்து வந்த சென்னை வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் சென்னை அணி 77 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. இந்தத் தொடர் முழுவதும் சிக்ஸர்களால் ரசிகர்களை மகிழ்வித்த ஷிவம் துபே 25 ரன்களில் மிட்செல் மார்ஸ் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதைத் தொடர்ந்து அம்பதி ராயுடு 23 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ஆட வந்த கேப்டன் தோனி - ஜடேஜா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்க்க, சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. தோனி 20 ரன்களும் ஜடேஜா 21 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி சார்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, லலித் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

அதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் சால்ட் ஆகியோர் ஆட வந்தனர். முதல் ஓவரிலேயே வார்னர் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து டெல்லி அணியின் ஸ்கோர் 20 ரன்களாக இருந்தபோது சால்ட் அவுட் ஆனார். அடுத்து ஆட வந்த மிட்செல் மார்ஷல் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து ஆட வந்த மணிஷ் பாண்டே, ரூஸோ ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். அவர்களது ஆட்டமும் அதிக நேரம் நீடிக்கவில்லை. அடுத்ததாக, அக்ஸர் படேர் ஆட வந்து சற்று அதிரடி காட்டினார். இவர் 12 பந்துகளில் 21 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த எந்த வீரரும் பெரிதாக ரன் அடிக்கவில்லை. இதனால் 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்த 140 ரன்களே எடுத்து. இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com