ரஷீத் கான் விஸ்வரூபம் எடுத்தும் குஜராத் அணி தோல்வி!

ரஷீத் கான் விஸ்வரூபம் எடுத்தும் குஜராத் அணி தோல்வி!

டைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் நேற்று இரவு மும்பை இந்தியன் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்டை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதைத் தொடர்ந்து களம் இறங்கி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. இஷான் கிஷான் 31 ரன்களும் ரோஹித் சர்மா 29 ரன்களும் எடுத்தனர். சூர்யகுமாரின் அதிரடி சதத்தால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தனர்.

அதைத் தொடர்ந்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கோடு விளையாட வந்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஹா மற்றும் கில் இரண்டு பேரும் சொற்ப ரன்கள் எடுத்து அவுட் ஆகி மைதானத்தை விட்டு வெளியேறினர். அதைத் தொடர்ந்து ஆட வந்த விஜய் சங்கர், டேவிட் மில்லர் ஜோடி அதிரடியாக விளையாடி அணின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஆனாலும், மும்பை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாததால் குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் விளையாட வந்த ரஷித் கான் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்தார். போடப்பட்ட அனைத்துப் பந்துகளையும் தொடர்ந்து இவர் பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் விரட்டி மைதானத்தையே அதகளப்படுத்தினார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த ரஷித் கான் 79 ரன்கள் எடுத்தார். இதுவரை விளையாடிய ஐபிஎல் தொடரில் இவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை அணியின் சார்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளையும், பியூஷ் சாவ்லா மற்றும் குமார் கார்த்திகேயா தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதனால் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கும் மேலே சென்று இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com