உலகக் கோப்பை - 2007, டி20 கிரிக்கெட் போட்டியை இந்திய அணி மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாடி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தோனியின் தலைமையில் சென்றதால் மட்டுமே சாத்தியமானது என்று பல்வேறு தரப்பினரும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது கருத்துக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ‘தோனி என்ற இளம் வீரர் மட்டுமே தனியாக விளையாடி 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றாரா? அணியின் பிற பத்து வீரர்கள் விளையாவில்லையா? மேலும், அவர் மட்டுமே விளையாடி எல்லா உலகக் கோப்பைகளையும் வென்றாரா?’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில், ‘ஆஸ்திரேலியா அல்லது வேறு நாடுகள் உலகக் கோப்பையை வென்றால், அந்த நாடு வென்றது எனத் தலைப்புச் செய்தி ஆகிறது. ஆனால், இந்தியா வென்றால் மட்டும் அதை கேப்டனின் வெற்றியாகப் பார்க்கிறார்கள். வெற்றியோ, தோல்வியோ அது ஒட்டுமொத்த அணிக்கும் சொந்தம்’ என்று ஹர்பஜன் சிங் பதில் தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை வெற்றி 2027ல் நடந்து முடிந்து இன்று பல வருடங்கள் ஓடி விட்ட நிலையில், தற்போது இந்த சர்ச்சை ஹர்பஜன் சிங் மூலம் மீண்டும் எழுந்து இருப்பது கிரிக்கெட் ஆர்வலர்களிடம் மிகப்பெரும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.