பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீரை கொண்டு செல்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?
பிளாஸ்டிக் பாட்டில்கள் உடலை பாதிப்பதோடு சுற்றுசூழலையும் பாதிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் 3.5 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன.
இவை மறுசுழற்சிக்கு முறையாக உட்படுத்தப்படுவதில்லை. இதனால் கழிவுகள் அதிகமாகி கொண்டிருக்கிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது நமக்கும் நாட்டுக்கும் நல்லது.
பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள PET என்பது ஆன்டிமானி டிரைஆக்சைட் (Antimony Trioxide), Phthalates ஆகியவற்றை வெளியேற்றுகிறது.
இதில் ஆன்டிமானி டிரைஆக்சைட் புற்றுநோய், தோல் பிரச்சனைகள், பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்ப பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
மற்றொரு பொருளான Phthalates நம்முடைய ஆளுமைக்கு ஹார்மோனான நாளமில்லா சுரப்பியை மோசமாக்கும்.
நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET - Polyethylene Terephthalate) என்னும் வேதிப்பொருளை வைத்து தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த வேதிப்பொருளில் பிஸ்பீனால் (Bisphenol) மாதிரியான உடலுக்கு கெடுதல் செய்யும் வேதிப்பொருள்களும் உள்ளன.
இவை நாம் குடிக்கும் தண்ணீரில் கலந்தால் ஹார்மோன் சமநிலையின்மை, குழந்தை உண்டாவதில் சிக்கல்கள், புற்றுநோய் போன்ற பல உடல்நல கோளாறுகள் வரலாம்
பிளாஸ்டிக் பாட்டிலில் வைக்கப்படும் தண்ணீரை குடிக்கும் ஆண்களுக்கு ஹார்மோனில் பிரச்சனை ஏற்படுகிறது,
ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு மற்றும் சீக்கிரமே பெண்கள் பருவமடைதல் போன்றவற்றை ஏற்படுத்திவிடுகிறது.
மைக்ரோ பிளாஸ்டிக்குகள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மலட்டுத்தன்மை மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது
பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அதனை வாங்கி பயன்படுத்தலாமே.