உப்பு மாங்காய் சாப்பிடும் பழக்கம் இருக்கா?

உப்பு மாங்காய் சாப்பிடும் பழக்கம் இருக்கா?

பொதுவாக வீடுகளில் இருக்கும் போது மாங்காயில் உப்பு, மிளகாய் போட்டு சாப்பிடுவதற்கு ஆர்வமாக இருக்கும்.

மேலும் மாங்காய்களில் அல்போன்சா, அம்ரபாலி, பங்கன பள்ளி, ருமானி என மாம்பழங்களில் பல வகைகள் உள்ளன. இது போன்ற மாம்பழங்கள் அதிகமான ருசியுடன் இருக்கும்.

இதனை தொடர்ந்து சில வீடுகளில் இது போன்று மாங்காய்களை எடுத்து அதில் பச்சைக் கூட செய்து கொள்வார்கள். இவ்வாறு சாப்பிடும் போது அருமையாக இருக்கும்.

அந்த வகையில் இது போன்ற மாங்காயை எடுத்து கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் இது தொடர்பில் நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

மாங்காயில் மிளகாய் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?

1. சர்க்கரை அளவு குறைவு

மற்றைய பழங்களுடன் ஒப்பிடும் போது மாங்காயில் சர்க்கரை அதிகம் குறைவாக தான் இருக்கிறது. இதனால் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பச்சை மாங்காயை பயம் இல்லாமல் எடுத்து கொள்ளலாம். மேலும் இரத்தயோட்டத்தையும் சீர்படுத்துகிறது.

2. இதய நோய்

பச்சை மாங்காயில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது சீரான ரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன.

மேலும் இதயத்திற்கு நன்மையளிக்கும் ஆன்டிஆக்ஸிடன்டான மாங்கிஃபெரின் (Mangiferin) மாங்காயில் ஏராளமாக உள்ளது. இதனால் மனழுத்தமும் குறையும்.

3. ஜீரண பிரச்சினை

மாங்காய்களில் இயல்பாக செரிமானத்திற்கு தேவையான amylases எனப்படும் செரிமான நொதிகள் இருக்கிறது. மேலும் amylases என்சைம்கள் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்களை மால்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகளாகவும் மாற்றுவதற்கு உதவியாக இருக்கிறது.

4. கொலஸ்ட்ரால் கன்ட்ரோல்

நமது உடலில் இலகுவில் நச்சு தன்மைகள் அதிகம் இருக்கிறது. இதனை பச்சை மாங்காய்கள் நீக்குகிறது. மேலும் இந்த மாங்காய்கள் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து இலகுவில் விடுபடலாம்.

5. எடை குறைப்பு

எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் பச்சை மாங்காய் சாப்பிடுவது சிறந்தது. ஏனெனின் மாங்காய்களில் ஃபேட், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாக இருக்கிறது. இதிலிருக்கும் சில ஊட்டசத்துக்கள் செரிமானத்தை சீர்படுத்தி எடையை கட்டுக்குள் வைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com