டென்னிஸ் உலகக் கோப்பை (Davis Cup) பற்றி தெரியுமா?

Davis Cup Players
Davis Cup Players
Published on

டென்னிஸ் உலகில், சர்வதேச போட்டியின் உச்சமாக ஒரு நிகழ்வு உள்ளது, இது உலகெங்கிலும் உள்ள டென்னிஸ்  வீரர்களை மற்றும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கிறது. அந்த நிகழ்வு "டென்னிஸ் உலகக் கோப்பை" என்று அறியப்படும் டேவிஸ் கோப்பை. டேவிஸ் கோப்பையின் சாராம்சத்தை, அதன் சுவாரசியமான வரலாற்றை, மேலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிற டேவிஸ் கோப்பை 2023 போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தேர்வான எட்டு அணிகளைப் பற்றி யும் பார்ப்போம்.

டேவிஸ் கோப்பை என்றால் என்ன?

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பால் (ITF) நிர்வகிக்கப்படும் ஆண்களுக்கான போட்டி டேவிஸ் கோப்பை ஒரு  சர்வதேச குழுப் போட்டியாகும். இது உலகெங்கிலும் உள்ள 150 க்கும் மேற்பட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வருடாந்திர போட்டி. டேவிஸ் கோப்பை என்பது வெறும் டென்னிஸ் போட்டி மட்டுமல்ல; இது தேசிய பெருமை மற்றும் எல்லைகளை கடந்த நட்புறவின் கொண்டாட்டமாகும். பல தனிப்பட்ட டென்னிஸ் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து அவர்களது தேசிய அணிகளுக்காக,  உலக சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிடுகின்றனர்.

james dwite
james dwite

டேவிஸ் கோப்பை வரலாறு

டேவிஸ் கோப்பையின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியது. இது அமெரிக்க தேசிய புல்வெளி டென்னிஸ் சங்கத்தின் முதல் தலைவரான ஜேம்ஸ் டுவைட்டின் முயற்சியில் வேரூன்றியுள்ளது. டுவைட் ஓர் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சிறந்த அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வீரர்கள் ஒருவரையொருவர் சந்தித்து போட்டியிட வேண்டும் என்று விரும்பினார். அவரது ஆரம்ப முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றாலும், சர்வதேச டென்னிஸ் போட்டி பற்றிய யோசனை அப்போதுதான் உருவானது.

முதல் டேவிஸ் கோப்பை போட்டி

முதல் டேவிஸ் கோப்பை போட்டி 1900 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கும் பிரிட்டிஷ் தீவுகள் அணிக்கும் இடையே நடந்தது. அமெரிக்கர்கள், டுவைட் டேவிஸ் தலைமையில் முதல் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றனர்.  டுவைட் டேவிஸ்  இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கு களம் அமைத்தார்.

dwight davis
dwight davis

டேவிஸ் கோப்பை அமைப்பு

டேவிஸ் கோப்பை வெறும் டென்னிஸ் போட்டி மட்டுமல்ல; இது ஒரு தனித்துவமான கட்டமைப்பைக் கொண்ட சிக்கலான போட்டியாகும். உலகின் முதல் 18 தேசிய அணிகள் தலா மூன்று அணிகள் கொண்ட ஆறு ரவுண்ட்-ராபின் குழுக்களாக பிரிக்கப்பட்டு, குழுக்களில் வெற்றி பெறுபவர்கள், மற்றும் இரண்டு சிறந்த இரண்டாவது இடங்களைப் பெறும் அணிகள் என மொத்தம் எட்டு அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் டேவிஸ் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிப்ரவரியில் தொடங்கி இறுதிப்போட்டி  நவம்பரில் முடிவடையும்.

இதையும் படியுங்கள்:
சேஃப்டி பின் அலர்ஜி பற்றி தெரியுமா?
Davis Cup Players

டேவிஸ் கோப்பை 2023  - தேர்வு பெற்ற இறுதி 8 அணிகள்

2023 ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பையின் மிகவும் பரபரப்பான  ஆண்டாக அமைந்தது. இம்முறை என்றும் இல்லாத அளவில் 155 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. பல சுற்றுகளைக் கடந்து இறுதியில் முதல் 18 அணிகள் தேர்வாகி, அவற்றிலிருந்து 8 அணிகள் தற்போது எஞ்சியுள்ளன. இறுதிச்சுற்றுக்கு தேர்வான எட்டு அணிகளும் நவம்பர் 21 - 26 வரை ஸ்பெயின் நாட்டில் உள்ள  மாலாகாவில் போட்டியிடவிருக்கின்றனர்.

australian  players
australian players

தேர்வு பெற்ற இறுதிப் போட்டியாளர்கள் மற்றும் போட்டிகள்

கனடா, பின்லாந்து, செக் குடியரசு, ஆஸ்திரேலியா, இத்தாலி, நெதர்லாந்து, செர்பியா, மற்றும், கிரேட் பிரிட்டன் அணிகள் கடும் போட்டிக்கு பிறகு இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.

போட்டிகள்:

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர், 1600 CET (மத்திய ஐரோப்பிய நேரம்) - கனடா vs பின்லாந்து

புதன்கிழமை, 22 நவம்பர், 1600 CET - செக் குடியரசு vs ஆஸ்திரேலியா

வியாழக்கிழமை, நவம்பர் 23 , 1000 CET - இத்தாலி vs நெதர்லாந்து

வியாழக்கிழமை, நவம்பர் 23, 1600 CET - செர்பியா vs கிரேட் பிரிட்டன்

டேவிஸ் கோப்பை வெறும் டென்னிஸ் போட்டி மட்டுமல்ல, இது ஒரு மாபெரும் சர்வதேச கொண்டாட்டமாகும். வரவிருக்கும் போட்டியின் இறுதி 8 அணிகளின் உற்சாகம் உலகெங்கிலும் உள்ள வீரர்கள் மற்றும் ரசிகர்களின் இதயங்களைக் கைப்பற்றும் காட்சியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com