ரொனால்டோவின் சம்பளம் என்ன தெரியுமா?

ரொனால்டோவின் சம்பளம் என்ன தெரியுமா?
Published on

உலக அளவில் அங்கீகாரம் பெற்ற கால்பந்து விளையாட்டு வீர்ர்களில் பிரபலமானாவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இன்றைய தேதியில் அதிக சம்பளம் பெறும் சூப்பர் ஸ்டாரும் இவர்தான்.

போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீர்ரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, செளதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து சங்கத்தில் இணைந்துள்ளார். வருகிற 2025 ஆம் ஆண்டு வரை அந்த கால்பந்து சங்கத்தில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறிய ரொனால்டோ, செளதி அரேபிய கிளப்பில் சேரலாம் என்று செய்திகள் ஏற்கெனவே உலவி வந்தன.

கால்பந்து வரலாற்றில் இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை ரொனோடால்வுக்கு தர செளதி அரேபிய சங்கம் முன்வந்துள்ளது. அதாவது அவருக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி வரை சம்பளம் கிடைக்கும். விளம்பர ஒப்பந்தங்களையும் சேர்த்தால் அவரது சம்பளம் ரூ.1,700 கோடியாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது.

“புதிய கால்பந்து லீகில் வேறு ஒரு நாட்டில் விளையாடும் அனுபவத்தை பெற ஆர்வமாக இருக்கிறேன்” என்று ரொனால்டோ கூறியுள்ளார்.

செளதி புரோ லீக் கால்பந்து போட்டியில் அல்-நாசர் அணி 9 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ரொனால்டோ எங்கள் அணியில் சேர்ந்துள்ளதன் மூலம் மேலும் வரலாறுகள் படைக்கப்படும் என்று அந்த அணியின் நிர்வாகம் கூறியுள்ளது.

வருங்கால சந்ததியினர், சிறுவர்கள் மற்றும் பெண்கள் விளையாட்டில் சிறந்து விளங்க இது ஊக்கமளிக்கும் என்று நம்புவதாகவும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக மற்றொரு செளதி அணியான அல்-ஹிலால், ரொனால்டோவை ஒரு பெருந்தொகைக்கு ஒப்பந்தம் செய்ய முயன்றது. அப்போது அவர், மான்செஸ்டர் அணியில் மகிழ்ச்சியுடன் இருந்த்தால் அவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கடந்த நவம்பர் மாதம் அளித்த ஒரு பேட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணி தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும், அணியிலிருந்து கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூறியிருந்தார். ரியல் மாட்ரிட் அணியில் சேர்ந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2021 இல் ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்துப் போட்டியில் போர்ச்சுகல்- மொராக்கே இடையே பலப்பரீட்சை நடந்தது. இதில் மொராக்கோ வீரர் யூசுப் நெஸிரி, பந்தை தலையால் முட்டி கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் அணியை அரையிறுதிச்சுற்று கொண்டு சென்றார். போர்ச்சுகல் அணி கடைசிவரை கோல் ஏதும் போடாமல் தோல்வி அடைந்ததுடன் தொடரைவிட்டு வெளியேறியது. இந்த தோல்வி காரணமாக ரொனால்டோவின் உலக கோப்பை கனவும் தகர்ந்தது. போர்ச்சுகல் தோற்றவுடன் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com