ரொனால்டோ தங்கியிருக்கும் சொகுசு ஹோட்டல் அறையின் வாடகை என்ன தெரியுமா?

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ
Published on

உலக அளவில் கால்பந்து விளையாட்டு வீரர்களில் பிரபலமானாவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர்ரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, செளதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து சங்கத்தில் இணைந்துள்ளார். வருகிற 2025 ஆம் ஆண்டு வரை அந்த கால்பந்து சங்கத்தில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் பெறும் சம்பளம் என்ன தெரியுமா? ஆண்டுக்கு ரூ.1,700 கோடி. இன்றைய தேதியில் அதிக சம்பளம் பெறும் சூப்பர் ஸ்டாரும் இவர்தான்.

மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறிய ரொனால்டோ, செளதி அரேபிய கிளப்பில் சேரலாம் என்று செய்திகள் ஏற்கெனவே உலவி வந்தன.

கால்பந்து வரலாற்றில் இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை ரொனோடால்வுக்கு தர செளதி அரேபிய சங்கம் முன்வந்துள்ளது. அதாவது அவருக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி வரை சம்பளம் கிடைக்கும். விளம்பர ஒப்பந்தங்களையும் சேர்த்தால் அவருக்கு ரூ.1,700 கோடி சம்பளமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

"செளதி புரோ லீக் கால்பந்து போட்டியில் அல்-நாசர் அணி 9 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ரொனால்டோ எங்கள் அணியில் சேர்ந்துள்ளதன் மூலம் மேலும் வரலாறுகள் படைக்கப்படும்" என்று அந்த அணியின் நிர்வாகம் கூறியுள்ளது.

ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ 11 ஆண்டுகளுக்குப் 2011 ஆம் ஆண்டு மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பினார். கடந்த நவம்பரில் அளித்த பேட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணி தமக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், அணியிலிருந்து கட்டாயமாக வெளியேற்ற பட்டதாகவும் ரொனால்டோ கூறியிருந்தார்.

சமீபத்தில் கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்துப் போட்டியின் கால் இறுதியில் போர்ச்சுகல் அணி, மொராக்கோவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி காரணமாக ரொனால்டோவின் உலக கோப்பை கனவும் தகர்ந்தது.

இந்த நிலையில் செளதி அரேபியாவின் அல்-நாஸர் அணியில் சேர்ந்துள்ள ரொனால்டோ ரியாத்தில் ‘கிங்டம் டவர்’ என்னும் மிகப்பெரிய சொகுசு ஹோட்டலில் வீடு போன்ற தனி அறை எடுத்து தங்கியுள்ளார். இதன் மாத வாடகை என்ன தெரியுமா ரூ.2.5 கோடி. மனைவி, குழந்தைகளுடன் தங்குவதற்கு ஒரு நல்ல வீடு கிடைக்கும் வரை அவர் இங்கு தங்கியிருப்பார் என்று சொல்லப்படுகிறது.

புதிதாக சேர்ந்துள்ள அல்-நாஸர் அணிக்காக அவர் வருகிற ஜனவரி 22 ஆம் தேதி விளையாடுவார் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த ஆண்டு எவர்டன் கால்பந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் தோல்வி அடைந்தபோது எவர்டன் அணி ரசிகர் ஒருவர் கையில் வைத்திருந்த செல்லிடப்பேசியை (செல்போன்) ரொனால்டோ கோபத்தில் தட்டிவிட்டதை அடுத்து அவருக்கு 50,000 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டதுடன் இரண்டு போட்டிகளில் விளையாடவும் கடந்த நவம்பரில் கால்பந்து சங்கம் அவருக்கு தடைவிதித்திருந்தது.

மேலும் முழு தகுதி பெற்ற பின்னரே அவர் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று அல்-நாஸர் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். எனவே ரொனால்டோ ஜனவரி 14 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்றும் ஜனவரி 25 போட்டியில் பங்கேற்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com