ஒரே இன்னிங்ஸில் சதங்கள் அடித்த Three W's தெரியுமா?

ஒரே இன்னிங்ஸில் சதங்கள் அடித்த Three W's தெரியுமா?

இங்கிலாந்து, மேற்கி இந்திய தீவு அணிகளுக்கிடையே, 1954 ஆம் ஆண்டு 4வது டெஸ்ட் போட்டி நடந்தது.

அப்போது, மேற்கு இந்திய தீவு அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 681 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 537 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 98 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தனர். 

இந்த டெஸ்டில்தான் மேற்கு இந்திய அணியின் புகழ்பெற்ற மூன்று டபிள்யூஸ் (Three W's) என்று அழைக்கப் பட்ட வீக்ஸ் (Weeks), வால்காட் (Walcott) மற்றும் வொரல் (Worrell) சதங்கள் அடித்தனர்.

Frank Worrell, Everton Weekes and Clyde Walcott
Frank Worrell, Everton Weekes and Clyde Walcott

எவெர்ட்டன் வீக்ஸ் (Everton Weeks) 206 ரன்கள், வொரல் (Frank Worrell) 167 ரன்கள் மற்றும் வால்காட் (Clyde Walcott) 124 ரன்கள் எடுத்தனர். இதில் வீக்சும், வொரலும் (Weeks and Worrell) பார்னர்ட்ஷிப்பில் ஜோடி சேர்ந்து 342 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர்.

இந்த மூன்று புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்களும் சர் (Sir) பட்டம் வழங்கி கவுரிக்கப்பட்டனர்.

------------------------------

Richie Benaud
Richie Benaud

எந்த தொடரிலும் தோல்வியைக் காணாத கேப்டன்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் டீம் கேப்டனாக திகழ்ந்த ரிச்சி பெனாட் (Richie Benaud), முதல் டை டெஸ்ட் (First Tied test) உட்பட மொத்தம் 28 டெஸ்ட் மேட்சுகளில் கேப்டனாக இருந்தார். அவற்றில் 4 டெஸ்ட் மேட்சுகளில் மட்டும் தோல்வி கண்டார். குறிப்பாக இவரது தலைமையில் எந்த தொடரையும் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது கிடையாது.

------------------------------

கோல்டன் டக் தெரியும்! டைமண்ட், சில்வர் டக் பற்றி தெரியுமா?

சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பவுலர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், தொடர்ந்து மூன்று போட்டிகளில் முதல் பந்திலேயே அவுட் ஆனார் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யா குமார் யாதவ். முதல் பந்தில் அவுட் ஆவது கோல்டன் டக் (Golden Duck) என்பர். 1984 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் மூன்று மேட்ச்களில் தொடர்ந்து 0 (ரன் ஏதும் எடுக்காமல்) அவுட் ஆகியுள்ளார்.

கோல்டன் டக் தவிர கிரிக்கெட் விளையாட்டில் டைமண்ட் (Diamond) மற்றும் சில்வர் (Silver) டக்குகளும் உள்ளன. 

ஒரு பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளாமல் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆவதை 'டைமண்ட் டக்' என்பார்கள். அதாவது, ரன் அவுட் ஆவது, வைட் பாலில் ஸ்டும்ப்பிங் ஆவது போன்றவை இந்த ரகத்தை சார்ந்தவை.

பேட்ஸ்மேன் எதிர்கொண்ட முதல் பாலில் ரன் எதுவும் எடுக்காமல் எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் அவுட் ஆனால் அதை சில்வர் டக் என்பர்.

------------------------------

இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி! யார் வெற்றி பெற்றது தெரியுமா?

இலங்கை கிரிக்கெட் அணி, 1982ம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று அதிகாரப்பூர்வமான டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் அணிகக்கு எதிராக விளையாடியது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லீஸ் (Bob Willis) முதல் ஓவரின் முதல் பந்தை வீசினார். இலங்கை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பான்டுலா வர்ணபுர (Bandula Warnapùra) அந்த பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தில் அன்று இந்த நிகழ்வு நடந்தேறியது.

17 வயது ஆன அர்ஜுனா ரணதுங்க (Arjuna Ranatunga) இந்த போட்டியில் விளையாடினார். அப்பொழுது அவர் பள்ளி மாணவர். இவர் தலைமையில் பிற்காலத்தில் இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது. 

இந்த முதல் கிரிக்கெட் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com