பாக்ஸிங்க் டே டெஸ்ட் என்றால் என்ன?

பாக்ஸிங்க் டே டெஸ்ட் என்றால் என்ன?

ன்றைய தினம் (டிசம்பர் 26ம் தேதி) தென் ஆப்ரிக்காவில், இந்தியா,தென் ஆப்ரிக்கா இடையே “பாக்ஸிங்க் டே டெஸ்ட்” தொடங்குகிறது என்று படித்தவுடன், என் மனதில் எழுந்த கேள்வி, ‘குத்துச் சண்டைக்கும், கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்?”. நாலும் தெரிந்த நண்பர் ஒருவரைக் கேட்டேன்.

அவர் சொன்னார், “இதில் என்ன சந்தேகம்? கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் பாக்ஸிங்க் டே. ஆகவே அன்று நடக்கும் கிரிக்கெட் போட்டி ‘பாக்ஸிங்க் டே டெஸ்ட்”. இந்த அருமையான விளக்கத்தைக் கேட்டதும் மனதில் எழுந்த கேள்வி “கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் குத்துச் சண்டைக்கும் என்ன தொடர்பு”?

ஐரோப்பிய நாடுகளில் பண்டைய நாட்களிலிருந்து ஒரு பழக்கம் இருந்து வந்தது. ஏழைகளுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் சேகரிக்க, தேவாலயங்களில் பெட்டி வைத்திருப்பார்கள். கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள், அந்த பெட்டியைத் திறந்து அதிலுள்ள பணத்தையும், பரிசுப் பொருட்களையும் ஏழை, எளியவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பாளர்கள்.

அதைப் போல, 18ஆம் நூற்றாண்டில், பிரிட்டனில் வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள், இந்த நாளில் தங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் முதலாளிகளிடமிருந்து பரிசுகள், பணம் அடங்கிய “கிறிஸ்துமஸ் பெட்டி” பெற்றுக் கொள்வார்கள். பெரிய செல்வந்தர்கள், தங்கள் வீடுகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பணமும், பரிசுகளும் தந்து, அன்று அவர்களுக்கு விடுமுறை அளிப்பார்கள்.

ஊழியர்கள், தங்கள் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருடன் அந்த நாளை கொண்டாடுவார்கள். இதனால், இந்த நாள் ‘பாக்ஸிங்க் டே” என்ற பெயர் பெற்றது. இந்த நாள் பொது விடுமுறை நாள். இந்த நாளில் கடைகளுக்குச் சென்று பொருடகள் வாங்குபவர்கள் அதிகம். காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த நாடுகளில், இந்த நாளில் ஆரம்பிக்கின்ற கிரிக்கெட் போட்டியை ‘பாக்ஸிங்க் டே டெஸ்ட்’ என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள்.

www.cbc.ca
இதையும் படியுங்கள்:
இலக்கைத் தொட்டு சாதனைப் படைப்பாரா அஸ்வின்?
பாக்ஸிங்க் டே டெஸ்ட் என்றால் என்ன?

முதன் முதல் ‘பாக்ஸிங்க் டே டெஸ்ட்’ ஆஸ்திரேலியா, மெல்போர்ன் மைதானத்தில் 1980 ஆம் வருடம் நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியாவுடன், 1985, 1991, 1999, 2003, 2007, 2011, 2014, 2018, 2020 என்று 9 முறை ‘பாக்ஸிங்க் டே டெஸ்ட்’ விளையாடி இருக்கிறது. இதில் 2018, 2020இல் நடந்த போட்டிகளில் இந்தியா வெற்றியடைந்தது. ஐந்து போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றது. சதமடித்த இந்திய வீர்ர்கள் அஜிங்கிய ரஹானே (2), சச்சின் டென்டுல்கர் (1), விரேந்திர சேவாக் (1), விராட் கோலி (1).

தென் ஆப்ரிக்காவுடன் 1992, 1996, 2006, 2010, 2013, 2021 என்று ஆறு முறை விளையாடிய இந்தியா, 2010 மற்றும் 2021ல் வெற்றி பெற்றது. நான்கு முறை தோல்வி அடைந்தது. இந்தியா நியூஸிலாந்துடன் 1998ஆம் வருடம் விளையாடி தோற்றது. இதுவரை இந்தியா பங்கேற்ற 16 “பாக்ஸிங்க் டே டெஸ்ட்” போட்டிகளில், 4 போட்டிகளில் வென்றது. 25 சதவிகிதம் வெற்றி என்ற நிலையில் உள்ளது.

crickettimes.com/

இந்நிலையில், இன்று நடைபெறும் தென்னாப்பிரிக்காவுடனாக பாக்ஸிங் டே போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com