நம் மகிழ்ச்சிக்கு உதவும் நால்வர் யார் தெரியுமா?

ஆரோக்கியத் தகவல்!
நம் மகிழ்ச்சிக்கு உதவும் நால்வர் யார் தெரியுமா?

ருவரது உள்ளம் மகிழ்ந்திருக்கும்போது உதட்டில் புன்னகை பூத்து, முகத்திற்கு தனி அழகைத் தரும். மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க விரும்பாதவர் யாரும் உண்டா இவ்வுலகில்? இதில் சின்னஞ்சிறு குழந்தை, முதியவர், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது. எப்போதும் சிரித்த முகத்துடன் உற்சாகமாகக் காணப்படும் நபர்களிடம் பேசிப் பழக பிறருக்கும் ஆவல் பிறக்கும்.

மகிழ்ச்சியான மனநிலை என்பது ஒருவருக்கு இயற்கையாக அமைந்த குணமா? அல்லது பயிற்சியின் மூலம் வருவதா? பதில் இரண்டுமே சரிதான் என்றாலும், சூழ்நிலையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. மகிழ்ச்சிக்கு புறக்காரணங்களைத் தாண்டி, நம் உடலில் சுரக்கும் நான்கு முக்கியமான ஹார்மோன்கள் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன என்பது ஆச்சர்யம்தானே? அந்த நால்வர்;  டோபமைன், செரட்டோனின், எண்டார்பின் மற்றும் ஆக்ஸிடாசின்.

டோபமைன்;

னித மூளையில் டோபமைன் சுரக்கும் போது உடலில் நல்ல இனிமையான உணர்வுகளை எழுப்பும். புதிய விஷயங்களைக் கற்றல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

செரட்டோனின்;

செரட்டோனின் டிப்ரெஷன் எனும் மனச்சோர்வை விரட்டுவதில் முக்கியக்காரணியாக விளங்குகிறது. இது பசியைத் தூண்டி, உடல் செரிமானத்திற்கு உதவுவதுடன் ஆழ்ந்த உறக்கத்திற்கும் வழி வகுக்கிறது.

எண்டார்பின்கள் ;

டலில் ஏற்படும் காயங்கள், புண், மற்றும் நோய்வாய்ப்படும்போது, வலியைக் குறைக்க உடல் இயற்கையாக உருவாக்கும் ஹார்மோன்கள் தான் எண்டார்பின்கள். சாப்பிடுவது, நடை மற்றும் உடற்பயிற்சி, செய்யும்போது இது அதிகரிக்கிறது.

ஆக்ஸிடாஸின் ;

க்ஸிடாஸின் என்பது "காதல் ஹார்மோன்" என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு பெண்ணின் பிரசவத்தின் போதும், சிசுவிற்கு தாய்ப்பால் புகட்டும் போதும் மற்றும் ஆரோக்கியமான பெற்றோர்-குழந்தை உறவுகளுக்கும் முக்கியமானது. மேலும் தன்னம்பிக்கையையும், பிறர் மேல் கருணை, பச்சாதாபம் கொள்வது போன்ற உணர்வுகளையும் ஊக்குவிக்கும்.

மகிழ்ச்சியான ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க  சில வழிகள்;

மகிழ்ச்சியான ஹார்மோன்களை நம்மால் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியும்.

1. சூரியஒளியில் கொட்டிக் கிடக்கிறது மகிழ்ச்சி ஹார்மோன்கள். சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மனித உடலில் செரோடோனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரத்திற்கு சில முறையாவது காலை நேர சூரிய ஒளியில் சில நிமிடங்கள் செலவிடுவது நல்லது. 

 2. நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். கைச்சுவை மற்றும் சிரிப்பு உடலில் டோபமைன் மற்றும் எண்டார்பின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. மனம் விட்டு சிரிப்பது, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்க உதவும். வேடிக்கையான வீடியோக்களை ஒன்றாகப் பார்ப்பது, பழைய இனிய நட்பு நாட்களை நினைவுபடுத்துவதும் மகிழ்ச்சியான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

3. நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அவசியம்: 

து ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன் எண்டார்பின், செரட்டோனின் மற்றும் டோபமைன் சுரப்பின் அளவையும் அதிகரிக்கின்றன. 

 4. உணவு வகைகள்;

கிழ்ச்சியான ஹார்மோன்களின் உற்பத்தியில் உணவு உட்கொள்ளும் வகையும் பங்கு வகிக்கிறது. சுவையான, காரமான உணவுகள் எண்டார்பின்களையும், இறைச்சி, தயிர், முட்டை மற்றும் பீன்ஸ், பாதாம், பிஸ்தா, பட்டாணி போன்றவை டோபமைன் உற்பத்தியையும் அதிகமாக்கும். மீன், கோழி இறைச்சி, வெண்ணெய், பூசணி விதைகள், வேர்க்கடலை, வாழைப்பழம் போன்றவை செரட்டோனின் உற்பத்தியை அதிகமாக்கும்.

பிடித்த இசையை கேட்பது, செரட்டோனின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இசைக்கருவியை வாசிப்பது எண்டார்பின்களை வெளியிடுகிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மன அழுத்தத்தைக் குறைப்பதில் தியானம் பயனுள்ளதாக இருப்பதுடன், டோபமைனின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. 

உடல் மனம், ஆரோக்கியமாக இருப்பதற்கு சரியான இரவு தூக்கம் அவசியம். சரியான தூக்கம் டோபமைன் சுரப்பை அதிகரிக்கிறது. மனதுக்கு பிடித்த அன்புக்குரியவருடன் நேரத்தை செலவிடுவது, செல்லப்பிராணிகளை வளர்ப்பது ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கிறது. 

‘’மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’’ என்று ஆங்கில எழுத்தாளரான ஆஸ்கார் வைல்ட் சொல்வதைப்போல, நாமும் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து, பிறரையும் மகிழ்விப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com