டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் முதல் சிக்ஸர் அடித்தது யார் தெரியுமா?

டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் முதல் சிக்ஸர் அடித்தது யார் தெரியுமா?

கிரிக்கெட் துணுக்குகள் :

சுனில் கவாஸ்கர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்டங்களில் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். இரு முறையும் கவாஸ்கரின் பவுலிங்கிற்கு விக்கெட்டை பறி கொடுத்தவர் பாகிஸ்தான் முன்னணி பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்த  ஜாகீர் அப்பாஸ் (Zaheer Abbas).

Joe Darling
Joe Darling

டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் முதல் சிக்ஸர் அடித்த பெருமை ஆஸ்திரேலிய வீரர் ஜோ டார்லிங் (Joe Darling) என்பவரையே சாரும். 1898 ஆம் வருடம், அதுவும் அவர் முதல் டெஸ்ட் ஆடி 21 வருடங்கள் கழித்துதான் இந்த பெருமையைப் பெற்றார்.

bob cowper
bob cowper

ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மன் பாப் கூப்பர் (Bob Cowper) முதல்முறையாக, ஒரு போட்டியில் 300 ரன்களுக்கு மேல் அடித்தது ஆஸ்திரேலிய மண்ணில்தான். 589 பந்துகளை எதிர்கொண்டு 307 ரன்கள் குவித்தார். இதில் 29 முறை 3 ரன்களை ஓடியே எடுத்துள்ளார். அப்போதைய பவுண்டரி எல்லைக் கோடு தள்ளி இருந்ததால் 29 முறை ஓடியே 3 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது.

புகழ் பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மான் (Don Bradman) டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேற்கு இந்திய வீரரான இவன் பார்ரோ (Ivan Barrow) மற்றும் இங்கிலாந்து வீரர் வால்லி ஹாமண்ட் (Wally Hammond) இவர்களின் விக்கெட்களைத்தான் அவர் எடுத்தார்.

Donald Bradman and Lala Amarnath
Donald Bradman and Lala Amarnath

டான் பிராட்மன் டெஸ்ட் மேட்சில் ஒரே ஒருமுறை ஹிட் விக்கெட் (Hit-wicket) முறையில் அவுட் ஆனார். அந்த குறிப்பிட்ட பந்தை வீசி விக்கெட் வீழ்த்தியவர் இந்திய வீரர் லாலா அமர்நாத் (Lala Amarnath).

டான் பிராட்மேனுக்கு எதிராக டெஸ்ட் மேட்சில் பவுலிங் செய்த ஒரே ஒரு தமிழக வீரர் சி ஆர் ரங்காசாரி (C R Rangachari) ஆவார். அன்றைய மதராஸ் அணிக்காக விளையாடியவர். இந்திய கிரிக்கெட் அணி 1947-48 ல் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாட சென்ற குழுவில் இடம் பெற்றவர்.

இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மானாக திகழ்ந்த பாரூக் என்ஜினீயர் (Farokh Engineer) கடைசி டெஸ்ட் இரண்டு இன்னிங்சிலும் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். 1975 ஆம் வருடம் மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிராக அன்றைய பம்பாய் வான்கடே மைதானத்தில்தான் இது நிகழ்ந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com