உங்க குழந்தை சாப்பிட மாட்டேங்குதா?

உங்க குழந்தை சாப்பிட மாட்டேங்குதா?
Published on

“இந்தப் பிரச்னை தாய் கர்ப்பமாக இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது. தாயானவள், கர்ப்பக்காலத்தில் போஷாக்கான உணவுகளை எடுத்துக்கொள்வதோடு குழந்தை பிறந்த பிறகு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது தாய்ப்பால் புகட்டுவது அவசியம். குழந்தைக்கு நான்கு மாதத் திலிருந்து மற்ற உணவுகளைக் கொடுத்துப் பழக்க @வண்டும். வேகவைத்த காய்கறித் தண்ணீர்,

மசித்தப் பழங்கள் மற்றும் கேழ்வரகு, கோதுமை, ஓட்ஸ், சத்துமாவு ஆகியவற்றில் கஞ்சி செய்து தரலாம். எந்த  ஒரு புதிய உணவை அறிமுகப் படுத்தும் போதும் முதல் நாள் இரண்டு டீஸ்பூன் என்ற அளவில், மிகக் குறைந்த அளவிலேயே கொடுக்க வேண்டும். பிறகு படிப்படியாகக் கூட்டலாம். புதிய உணவை ஒருநாள் கொடுத்து விட்டு அது குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று நிறுத்தி விடக் கூடாது. தொடர்ந்து சில நாட்கள் தரவேண்டும். அதேபோல் ஒரு உணவை அறிமுகப்படுத்தும்போது மற்றொரு உணவை அறிமுகப்படுத்தக் கூடாது. பிறகு எந்த உணவு குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்ற குழப்பம் வரும். உப்பு, சர்க்கரையை மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்க வேண்டும். குழந்தையின் வயிறு மிக மென்மையானது என்பதை மறந்து விடக்கூடாது. இப்படி ஒரு வயதுக்குள் எல்லா வகை ருசியையும் குழந்தைக்கு அறிமுகப்படுத்திவிட்டால் அந்தக் குழந்தை பிற்காலத்தில் எல்லா உணவுகளையும் விரும்பிச் சாப்பிடும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தினமும் எட்டிலிருந்து பத்து மணி நேரத் தூக்கம் கண்டிப்பாகத் தேவை. இரவு சீக்கிரம் தூங்க வைத்து, காலையில் ஆறு மணிக் கெல்லாம் ஒரு கப் பால் கொடுத்து ஒன்றரை மணி நேர இடைவேளைக் குப் பிறகு காலை உணவைக் கொடுக்கலாம். ஸ்நாக்ஸ் நேரத்துக்கு கோதுமை ப்ரெட், சாண்ட் விச், சுண்டல், பழங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொடுக் கலாம் அதிக க@லாரி உள்ள உணவுகள்,பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட்களைத் தவிர்க் கவும்.

எந்த உணவாக இருந்தாலும் அதன் அழகும் மணமும் பசியைத் தூண்ட வேண்டும். அதன் சுவை உணவைச் விரும்பிச் சாப்பிட வைப்பதாக இருக்கவேண்டும். தரம், உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும் இவற்றில் அம்மா கவனம் செலுத்தினால் எந்தக் குழந்தையையும் விரும்பிச் சாப்பிட வைக்கலாம்”.

குழந்தையின் உடலானது ஓர் அழகான இயந்திரம் போன்றது. பச்சிளம் குழந்தையிலிருந்தே  உணவு முறைகளில் கவனம் செலுத்தினால்  பிறகு எந்தப் பிரச்னையும் வராது. சில தாய்மார்கள், “எனக்கு பால் சுரக்கல; பிழிந்து பார்த்தாலும் பால் வரல”னு சொல்வாங்க. உடனே பாட்டில் பாலைப் புகட்ட ஆரம்பிச்சுடு வாங்க. உண்மையில் குழந்தையானது, தாயிடம் வாய் வைத்து பால் உறிஞ்சும் போதுதான், தாயின் மூளைக்கு கட்டளை போகிறது. அப்போது ஒருவித ஹார்மோன் சுரந்து தாய்க்குப் பால் சுரக்க உதவுகிறது. இதற்கு மருத்துவத் துறையில் சக்கிங் ரிப்ஃலெக்ஸ்னு (sucking reflex) சொல்லுவோம். குழந்தை எவ்வளவுக்கு எவ் வளவு பால் குடிக்கிறதோ அந்த அளவுக்குப் பால் சுரக்கும். 

1-2 வயதில் குழந்தைகளுக்கு விருப்பு வெறுப்பு தெரிய ஆரம்பித்து விடும். குழந்தை ஏதேனும் உணவை வேண்டாம் என்று மறுத்தாலும் தாய் விடமாட்டாள். பத்து நிமிடத்துக்கு ஒருமுறை அந்த உணவை எடுத்து ஊட்டிக் கொண்டே இருப்பாள். இதனால் குழந்தைக்கு வெறுப்பு ஏற்பட்டுச் சாப்பிடாது அடம் பிடிக்கும். அந்த வெறுப்பை வேறு வழியில் வெளிப்படுத்தும்.

குழந்தை ஏதேனும் ஒருவேளை உணவைத் தவிர்த்து விட்டால், விட்டு விடுங்கள். அடுத்தவேளை நன்றாகச் சாப்பிடும். அதைத் தவிர்த்து குழந்தை பசியாக உள்ளதே என்று பாலில் சர்க்கரையைச் சேர்த்துப் புகட்டி விடு வார்கள். சர்க்கரையில் அதிக கலோரி இருப்பதால் குழந்தையின் தேவைக்கு அதிகமாக கலோரி கிடைத்து விடுமே தவிர தேவையான சத்துக்கள் கிடைக்காது. குழந்தைக்குப் பசியும் இருக்காது. எவ்வளவு ருசியான உணவு கொடுத்தாலும் சாப்பிடாது. 

சிறு வயதிலிருந்@த குழந்தைகளுக்கு வீட்டில் உள்ளவர்கள்தான் ரோல் மாடல். மற்ற விஷயங் கள் மட்டும் அல்ல, சாப்பாட்டு விஷயத்தையும் பெற்றோரிடம் இருந்துதான் குழந்தை கற்றுக் கொள்கிறது. உதாரணத்திற்கு “சப்பாத்திக்கு யார் ஜாம் வைச்சு சாப்பிடுவா? மாம்பழம் சூடு, திராட்சை சளி பிடிக்கும், உருளைக்கிழங்கு வாய்வு” இப்படி ஒவ்வொன்றுக்கும் ஏதாவது காரணம் சொல்லி சில பெரியவர்கள் தவிர்த்து விடுவர். இவை குழந்தைகளின் ஆழ்மனத்தில் பதிந்துவிடும். எனவே குழந்தைகளோடு அமர்ந்து சாப்பிடுவதும் அந்த உணவின் ஆரோக்கியத்தைக் குறித்து எடுத்துக் கூறுவதும் பெற்றோரின் கடமை.

இப்படி சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டு தாய்மார்கள் செயல்பட்டால், குழந்தையும் அழகாகச்  சாப்பிடும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com