(ஒரே பெயர் கொண்ட) இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களின் இரட்டை சதங்கள்!

Jason Gillespie and Jason Holder
Jason Gillespie and Jason Holder

டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம், இரட்டை சதம் அடிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் பேட்ஸ்மன்கள் அடிப்பார்கள். அரிதாக வேக பந்துப் பவுலர்களும் இரட்டை சதம் அடிப்பதுண்டு. அப்படிப் பட்ட இருவர் பற்றி பார்ப்போம்.

Jason Gillespie
Jason Gillespie

1. ஜேசன் கில்லேஸ்பி, ஆஸ்திரேலிய வீரர்.

இவர் விளையாடியது 71 டெஸ்ட் மேட்ச்சுக்கள். எடுத்த விக்கெட்டுக்கள் 259. ஒரு இன்னிங்சில் 7 / 37. 1218 ரன்கள். இரண்டு அரை சதங்கள்.

ஒரே ஒரு சதம். அதுவும் இரட்டை சதம்.

பல வகை உடல் உபாதைகளால், பலவிதமான காயங்களால் இவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. இருந்தும், இவர் பேட்டிங்கில் உலக ரிகார்டு ஏற்படுத்தியுள்ளார். இவரது 31வது பிறந்த தினத்தில் நடைபெற்றது.

நைட் வாட்ச்மேனாக களம் இறங்கி 425 பந்துகள் எதிர்கொண்டு இரண்டு சிக்ஸர்கள், 26 பவுண்டரிகள் விளாசினார். எடுத்த ரன்கள் நாட் அவுட் 201* மைக்கேல் ஹஸ்ஸியுடன் ஜோடி சேர்ந்து 320 ரன்கள் ஏற்றி அணிக்கு உதவினார்.

இந்த சாதனை ஏப்ரல் 2006ல் சிட்டகாங் மைதானத்தில், வங்க தேசத்திற்கு எதிரான டெஸ்டில் நடைபெற்றது.

நைட் வாட்ச்மேன் எடுத்த அதிகபட்ச ரன்கள் தர வரிசையில், ஜேசன் கில்லேஸ்பி எடுத்த இந்த ரன்கள் 201* இன்று வரையில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜேசன் கில்லேஸ்பி, விளையாடிய கடைசி டெஸ்ட் இதுதான்.

Jason Holder
Jason HolderImg Credit: Primes world

2. அடுத்த ஜேசனின் சாதனை.

மேற்கு இந்திய தீவுகள் அணி, ஜேசன் ஹோல்டர். ஜனவரி, 2019 பிரிட்ஜ் டவுன் டெஸ்ட், இங்கிலாந்து அணிக்கு எதிராக.

இரண்டாவது இன்னிங்சில் 8வது பேட்ஸ்மேனாக களம் இறங்கினார், கேப்டன் ஜேசன் ஹோல்டர். விக்கெட் கீப்பர் டவுரிச் உடன் சேர்ந்து அணிக்கு 295 ரன்கள்கூட உதவினார். 6 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்களுடன் அணியின் ஆட்டத்தை முடித்துக்கொண்டார், டிக்ளார் செய்து.

டவுரிச் 116 *

ஜேசன் ஹோல்டர் 202 *

இதையும் படியுங்கள்:
ஆதரவற்ற சிறுவர்களை டென்னிஸில் முன்னேற்றும் முயற்சி! ரோகன் போபண்ணாவின் உயரிய நோக்கம்!
Jason Gillespie and Jason Holder

இந்த 202 ரன்கள் குவிக்க ஜேசன் ஹோல்டர் ஆடிய பந்துகள் 229 மட்டும்தான். பவுண்டரிகள் 23. சிக்ஸர்கள் 8.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 77 ரன்களுக்குச் சுருண்டது.

Lead by Example, என்பதற்கு ஏற்ப கேப்டனாக திறமையை வெளிப்படுத்தி ஆடி, வழி நடத்தி இந்த டெஸ்டில் வெற்றி பெறச் செய்தார், ஜேசன் ஹோல்டர்.

அவரைப்போல் இவருக்கும் ஆட்ட நாயகர் விருது கிட்டியது. இதுவரையில் 64 டெஸ்டுகளில் 157 விக்கெட்டுக்கள் எடுத்துள்ளார். 2797 ரன்கள் குவித்துள்ள இவரின் அதிக பட்ச ரன்கள் இந்த டெஸ்டின் (நாட் அவுட்) 202*.

இந்த இரு வீரர்களும் கிடைத்த சந்தர்ப்பங்களை வெகுவாக உபயோகித்து தங்களுக்கும், தங்கள் அணிகளுக்கும் சாதகமாக அமையும்படி மாற்றிக்கொண்ட இருவரின் திறமைகளும் பாராட்டுதல்களுக்கு உரியவை ஆகும்.

இருவரும் ‘ஜேசன்’ என்ற பெயர் கொண்டவர்கள் என்பது கூடுதல் சிறப்பு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com