112 வருட சாதனையை முறியடித்த இங்கிலாந்து! முதல் நாளில் 506 ரன்கள் குவிப்பு! முதல் நாளில் 4 வீரர்கள் சதம்! சாதனை மேல் சாதனை!

112 வருட சாதனையை முறியடித்த இங்கிலாந்து! முதல் நாளில் 506 ரன்கள் குவிப்பு! முதல் நாளில் 4 வீரர்கள் சதம்! சாதனை மேல் சாதனை!
Published on

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் 4 பேர் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். அதோடு 112 ஆண்டுகளுக்கு முன்பு 1910 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியில் முதல்நாளில் 494 ரன்கள் எடுத்திருந்த நிலையில, இதுவே டெஸ்டின் முதல் நாளில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக சாதனைப் பட்டியலில் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது முதல் நாளில் 506 ரன்கள் எடுத்து அந்த சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் தலைமயிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து அணி முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.

இந்நிலையில் நேற்று ராவல்பிண்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து தொடக்க வீரர்களாக ஜாக் கிராவ்லி – பென் டக்கட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 233 ரன்கள் சேர்த்தபோதுதான் முதல் விக்கெட்டே விழுந்தது.

அடுத்து, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் என அடுத்தடுத்த விக்கெட்டுக்கு களமிறங்கினாலும், இதில ஜோ ரூட் மட்டும் சதம் அடிக்கவில்லை. 31 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டானார். அவரைத் தவிர, சாக் கிராலி (122), பென் டக்கெட் (107), ஒல்லி போப் (108), ஹாரி ப்ரூக் (101) ஆகியோர் சதம் அடிக்கவே, இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 75 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக் இருவரும் அவுட்டாகாமல் இருக்கும் நிலையில் இன்றைய 2ம் நாள் போட்டி விறுவிறுப்பாக அமையவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், 112 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான போட்டியில் 494 ரன்கள் எடுத்ததே டெஸ்டின் முதல் நாளில் அதிக ரன்களை எடுத்த சாதனையாக இருந்துவந்தது. இந்நிலையில், நேற்று இங்கிலாந்து 506 ரன்கள் குவித்து அச்சாதனையை முறியடித்தது. அத்துடன், இதுவரை டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் 500 ரன்களை கடந்த முதல் அணியாக இங்கிலாந்து அணி உள்ளது. அதேபோல முதல் நாளில் எந்த அணி வீரர்களும் நான்கு சதங்கள் அடித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com