கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்ந்த பலதரப்பட்ட டெஸ்ட் மற்றும் முதல் தர ஆட்டங்களின் அதிக பட்ச ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதித்த இரண்டு குறிப்பிட்ட மேட்ச்சுக்களின் விவரங்களை காண்போம்.
1928 ஆம் ஆண்டு நடைப் பெற்ற இந்த டெஸ்ட் மேட்ச் இன்று வரை முதல் இடத்தில் இருக்கிறது.
இந்த மேட்சில் தான் தனது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தை துவக்கினார் புகழ் பெற்ற வீரர் டான் பிராட்மன். இவர் இந்த டெஸ்டில் எடுத்த ரன்கள் முறையே 18 , 1.
இந்த டெஸ்ட் ஓய்வு தினத்தை தவிர்த்து ஐந்து நாட்கள் நடை பெற்றன.ஆஸ்திரலியாவின் பிரிஸ்பேனில் நடைப் பெற்றது
30 நவம்பர் - 5 டிசம்பர் 1928 ல்...முதலில். பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி எடுத்த ரன்கள் 521.பாட்ஸி ஹென்றேன் 169 ரன்கள் குவித்தார்.ஆஸ்திரேலிய பவுலர்கள் ஜாக் கிரேகோரி , கிளார்ரி கிரிம்மேட் தலா மூன்று விக்கெட்டுக்கள்
எடுத்தனர்.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் அவ்வளவாக சோபிக்கவில்லை.அவர்கள் எடுத்த ரன்கள் 122.அவரது அறிமுக டெஸ்டில் ஆடிய டான் பிராட்மன் எடுத்த 18. ரன்களில் நான்கு பவுண்டரிகள் அடக்கம்.கேப்டன் ஜாக் ரிடர் அதிகமான 33 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணியின் வேக பந்து வீரர் ஹரோல்டு லார்வுட் ( பின்னாளில் பாடி லையன் புகழ் பவுலர் ) அட்டகாசமாக பந்துக்கள் வீசி அதிர வைத்தார். இவர் வீழ்த்தியது ஆறு விக்கெட்டுக்கள் ( 6 / 32 ).
இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியினர் எட்டு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு டிக்ளர் செய்தனர் 342 ரன்களுடன்
வெற்றி பெற 742 ரன்கள் தேவை என்ற கடின இலக்குடன் களம் இறங்கினர் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆட ஆஸ்திரேலிய அணி.ஆனால் இங்கிலாந்து பவுலர்களின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறினர் ஆஸ்திரேலிய வீரர்கள்.
ஜாக் வைட் என்ற வீரர் 7 ரன்கள் விட்டு கொடுத்து
4 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் பில் வுட்புல் கடைசி வரையில் ஆட்டம் இழக்காமல் ( carried the bat) அதிக பட்ச 30* ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்சில் ஒட்டு மொத்தமாக மோசமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது 66 ரன்களுக்கு.இதனால் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி அந்த டெஸ்டில். 675 ரன்கள் வித்தியாசம்.
முதல் தர மேட்ச் ஒன்றில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 851 ரன்கள் வித்தியாசத்தில் இந்த அணி வெற்றியை பதிவு செய்தது. இந்த மேட்ச் ஆயூப் கோப்பை போட்டிக்காக மூன்று நாட்கள் நடைப் பெற்றது.
1964 டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தானின் லாகூரில் பாகிஸ்தான் ரயில்வே அணி முதலில் பேட்டிங் செய்து குவித்த ரன்கள் 910. டிக்ளர் செய்தனர் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு.மொத்தம் நான்கு வீரர்கள் சதங்கள் எடுத்தனர்.
இதில் இரண்டு சதங்கள், ஒரு இரட்டை சதம் , ஒரு முச்சதம் அடங்கும்.
பேர்வேஸ் அக்தர் 337*
ஜாவத் பாபர் 220
இஜாஸ் ஹுசைன் 124
முகமத் ஷரிஃப். 106*
எதிர்த்து விளையாடிய டேரா இஸ்மாயில் அணியில் பந்து வீசிய 4 வீரர்கள் 100 க்கும் மேற்பட்ட ரன்களை அள்ளி வீசினார்கள்.
இணையத்துலா (279 /1)
அன்வர் கான் ( 295 / 3 )
பாசல் மடின் ( 110 / 1 )
கைசர் கான் (175 / 1 )
டேரா இஸ்மாயில் அணி பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தாக்கு பிடிக்க முடியாமல் தங்களது பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப் படுத்தினர்.முதல் இன்னிங்சில் 5 வீரர்கள் ரன் எதுவும்
எடுக்கவில்லை. அன்வர் கான் ஒருவர் மட்டும் இரட்டை
இலக்கை எட்டினார். இவரது ரன்கள் 11*. மற்ற நான்கு வீரர்கள் ஒற்றைப்பட எண்ணிக்கை ரன் எடுத்தனர்.
அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 32.பாலோவ் ஆன் பெற்று தொடர்ந்த இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் 27 ரன்கள். இந்த முறையும் ஐந்து வீரர்கள் ரன் எடுக்கவில்லை.
ஜமீல் அஹ்மட் என்ற வீரர் அதிக பட்சமாக எடுத்த ரன்கள் 10.
பாகிஸ்தான் ரயில்வே அணியின் வீரர் அபாக் கான் முதல் இன்னிங்சில் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் அஹாட் கான் அபாரமாக பந்துக்கள் வீசினார்கள்.அவர்கள் வீழ்த்திய விக்கெட்டுக்கள் முறையே 7 மற்றும் 9.
அபாக் கான் (7 / 14 )
அஹாட் கான் ( 9 / 7 )
இதனால், பாகிஸ்தான் இரயில்வே அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 851 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பதிவு செய்தது. இது முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆட்டங்களில் முதல் இடத்தில் உள்ளது.
முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆட்டங்களில் இந்த மேட்ச் முதல் இடத்தை வகிக்கின்றது.