9 இன்னிங்ஸில் 800 ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் புரூக்ஸ் உலக சாதனை!

9 இன்னிங்ஸில் 800 ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் புரூக்ஸ் உலக சாதனை!

இங்கிலாந்து பேட்ஸ்மன் ஹாரி புரூக் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி புரூக். வலது கை ஆட்டக்காரரான இவர், சமீபகாலமாக சிறப்பாக விளையாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நியூஸிலாந்து நாட்டுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல்நாளில் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார். ஆட்டமிழக்காமல் 169 பந்துகளில் 184 ரன்கள் குவித்துள்ளார். இவரை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.13.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து ஆட்டக்காரரான இந்த இளம் வீரர் 9 இன்னிங்ஸ் மட்டும் விளையாடி 800 ரன்களை குவித்து வரலாறு படைத்துள்ளார். முன்னதாக இந்தியாவின் வினோத் காம்ப்ளி 798 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்க்கது. ஆனால், ஹாரி புரூக் வெள்ளிக்கிழமை 807 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். ஹெர்பர்ட் சட்கிளிஃப் (9 இன்னிங்ஸில் 780), சுநீல் கவாஸ்கர் (9 இன்னிங்ஸில் 780), எவர்டன் வீக்ஸ் (9 இன்னிஸ்ஸில் 777 ரன்கள்) ஆகியோர் எடுத்துள்ள ரன்களைக் கடந்து வரலாற்றில் புதிய முத்திரை பதித்துள்ளார்.

ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். 315 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் மழையின் காரணமாக முதல்நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது.

21 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தத்தளித்த நிலையில் ஹாரி புரூக் ஆடவந்தார். முன்னதாக நியூஸிலாந்து அணி டாஸ் ஜெயித்து பந்துவீச முன்வந்தது.

நியூஸிலாந்து அணியினர் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது அவர்களுக்கு சாதமாக அமைந்தது. இங்கிலாந்து அணியில் ஜக் க்ராவ்லே 2 ரன்களிலும், பென் டக்கெட் 9 ரன்களிலும் ஓல்லி போப் 10 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாயினர்.

நியூஸி. அணியில் மாட் ஹென்றி மற்றும் ஸ்கிப்பர் டிம் செளதியும் விக்கெட்டுகளை சாய்த்தனர்.

குழந்தை பிறந்ததால் முதல் டெஸ்டை தவறவிட்ட ஹென்றி, இரண்டாவது டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரரான க்ராவ்லேயின் விக்கெட்டை சாய்த்தார். ஆல்ரவுணடர் மைக்கேல் பிரேஸ்வெல் இரண்டு அருமையான கேட்ச்களை பிடித்து போப் மற்றும் டக்கெட் வெளியேற காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் புரூக் களத்தில் இறங்கினார். மளமளவென ரன்களை எடுக்கத் தொடங்கினார். 169 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 184 ரன்களை குவித்தார். இவற்றில் 24 பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடங்கும். அவருக்கு உறுதுணையாக ரூட் விளையாடினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com