meta property="og:ttl" content="2419200" />

Federation Cup 2024 : தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா!

Athelet Neeraj Chopra
Neeraj Chopra
Published on

நடப்பு ஆண்டின் Federation Cup Athelets தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார், ஒலிம்பிக் பதக்க வீரர் நீரஜ் சோப்ரா.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற Federation Cup Athelets போட்டியில் நீரஜ் சோப்ராவின் சிறந்த எறிதல் என்றால், அது 82.27 மீட்டராகும். மூன்று ஆண்டுகள் கழித்து உள்நாட்டுப் போட்டிகளில் நீரஜ் பங்குப்பெற்றார். இதற்கு சில நாட்களுக்கு முன், தோஹா டயமண்ட் லீக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். அந்தப் போட்டியில் நீரஜ் சோப்ரா, 88.36 மீட்டரில் எறிந்தார். இதன்மூலம் அவர் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. மூன்றாவது சுற்று வரை அவர் இரண்டாம் இடத்திலேயே நீடித்து வந்தார். அதன்பிறகு, மூன்றாம் சுற்றிலேயே அவர் விஸ்வரூபம் எடுத்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

மூன்றாவது சுற்றுக்குப் பிறகே நீரஜ் 82 மீட்டரைக் கடந்து வீசினார். இவர் 82 மீட்டர் வீசுகையில், டிபி மனு 82.06 மீட்டர் அளவு வரை வீசியிருந்தார். இதனால் இருவருக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. நீரஜ் சோப்ரா விட்டுக்கொடுக்காமல் தனது நான்காவது த்ரோவில் 82.27 மீட்டர் தூரத்தைக் கடந்தார். இறுதுவரை, நீரஜுக்குப் போட்டியாக இருந்த, டிபி மனுவால் கூட அந்த மீட்டரைக் கடந்து வீச முடியவில்லை. இதனையடுத்து, நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். டிபி மனு 82.06 மீட்டருடன் வெள்ளிப் பதக்கமும், உத்தம் பாட்டீல் 78.39 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்தியாவின் புகழ்பெற்ற ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர்களில் ஒருவரான கிஷோர் ஜெனாவின் சிறந்த எறிதல் 75.49 மீட்டராக மட்டுமே அமைந்தது. 

75 மீட்டர் ஈட்டி எறியும் வீரர்கள், தகுதிச் சுற்றில் பங்கேற்கத் தேவையில்லை என்று இந்திய தடகளத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். டிபி மனுவும் நீரஜ் சோப்ராவும் ஏற்கனவே பலமுறை 75 மீட்டருக்கு அதிகமாக ஈட்டி எறிந்ததால், நேரடியாகவே இருவரும் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள்:
ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கையையே மாற்றிய அம்மாவின் நகை!
Athelet Neeraj Chopra

ஒலிம்பிக்கில் பங்குபெற வேண்டுமெனில் டிபி மனு 85.5 மீட்டரைக் கடக்க வேண்டும். ஆனால், அவர் அதனை கடக்க தவறியதால், அவர் ஒலிம்பிக்கில் பங்குப்பெறும் தகுதியை இழந்தார்.

ஃபெடரேஷன் கோப்பையின்போது நீரஜ் சோப்ரா, தனது சிறந்த எறிதலை பதிவு செய்யவில்லை என்பதுதான் உண்மை. நீரஜ் சோப்ரா தனது ஈட்டி எறிதல் வாழ்க்கையில் 82.27 மீட்டரை பலமுறை கடந்துள்ளார். கடந்த ஜூன் 2022ம் ஆண்டு ஸ்டாக்ஹோம்மில் நடைபெற்ற டயமண்ட் லீக்கில், நீரஜ் 89.94 மீட்டர் தூரத்தை கடந்து வீசி தேசிய சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com