FIDE Chess: குகேஷை எளிதில் வென்றார் கார்ல்ஸன்;
பிரக்யானந்தாவை வீழ்த்தினார் அர்ஜுன்!

FIDE Chess: குகேஷை எளிதில் வென்றார் கார்ல்ஸன்; பிரக்யானந்தாவை வீழ்த்தினார் அர்ஜுன்!

Published on

ஜர்பைஜான் நாட்டின் பாகுவில் நடைபெற்று வரும் ஃபிடே உலகக்கோப்பை செஸ் காலிறுதி போட்டியில் அர்ஜுன் எரிகிஸி, திறமையாகவும் நேர்த்தியாகவும் விளையாடி பிரக்யானந்தாவை  53வது நகர்த்தலில் தோல்வியுறச் செய்தார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் உலகின் நெம்பர் 1 செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்ஸன், இந்தியாவின் குகேஷை எளிதில் வென்றார். குகேஷ் செய்த தவறுகளை கார்ல்ஸன் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு வெற்றி பெற்றார்.

விதித் குஜராத்தி – நிஜாத் அபஸோவ் இடையிலான ஆட்டம் 109 நகர்த்தலுக்குப் பின் டிராவில் முடிந்தது. இதேபோல், லீனியர் டோமினிகஸ் பெரஸ், உலகின் 2ம் நிலைஆட்டக்காரரான ஃபாபியானோ கருவான இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது.

37வது நகர்த்தலின்போது பிரக்யானந்தா, எதிரணியில் கறுப்பு ராணியால் ஏற்படும் ஆபத்தை உணராமல் பிஷப்பை நகர்த்தி தவறு செய்தார். இதையடுத்து, நிலைமையை புரிந்துகொண்ட அர்ஜுன், அடுத்தடுத்த நகர்த்தலின் மூலம் தனது வெற்றியை மறைமுகமாக பிரக்யானந்தாவுக்கு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விளையாடிய பிரக்யானந்தா, அடுத்த நகர்த்தலுக்கு 21 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். 53வது நகர்த்தலில் அர்ஜுன், பிரக்யானந்தாவை வெற்றி கண்டார்.

கார்ல்ஸன் - குகேஷ் இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாகவே சென்றது. இருவரும் போட்டி போட்டு விளையாடினர். ஆனால், 34வது நகர்த்தலின்போது குகேஷ் தவறு செய்தார். அடுத்த நகர்த்தலிலும் குகேஷ் தவறை தொடர்ந்தார். இதைத் தனக்கு சாதமாக்கிக் கொண்ட கார்ல்ஸன் வெற்றி பெற்றார். கார்ல்ஸன் திறமையாக ஆடி குகேஷுக்கு செக் வைத்தார். ஒரு கட்டத்தில் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் குகேஷ் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

மகளிர் அரையிறுதியில் 2ஆம் நிலை ஆட்டக்காரரான ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோரியாசிக்னா, சீனாவின் டான் ஜாங்யியை 45வது நகர்த்தலில் தோல்வியடையச் செய்தார். மற்றொரு போட்டியில் உக்ரைனின் அன்னா முஸிசுக், பல்கேரியாவின் நுர்கியுல் சாலிமோவா இடையிலான ஆட்டம் 32வது நகர்த்தலில் டிராவில் முடிவடைந்தது.

logo
Kalki Online
kalkionline.com