முதல் முதலில் ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்திய, இந்திய பவுலர் சுபாஷ் குப்தே.
கான்பூர் டெஸ்ட்.
டிசம்பர், 1958.
மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு எதிராக.
முதல் ஏழு விக்கெட்டுக்களை சுபாஷ் குப்தே எடுத்துவிட்டார்.
8வது ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றியவர் வேக பந்து போட்ட வசந்த் ரஞ்சனே. இவர் லான்ஸ் கிப்ஸ், விக்கெட்டை எடுத்தார்.
9வது 10வது விக்கெட்டுக்களை எடுத்தவர், ஸ்பின் பவுலர் சுபாஷ் குப்தே. அதிகமான ஓவர்களை வீசியவரும் இவரே.
34.3 ஓவர்கள்.
11 மெய்டன்கள்.
102 ரன்கள்.
9 விக்கெட்டுக்கள்.
இந்த டெஸ்டில் மேற்கு இந்திய தீவுக்கள் அணி மற்றும் இந்திய அணி, இருவரும் முதல் இன்னிங்சில் எடுத்த ஸ்கோர் சமம். ரன்கள் 222.
டெஸ்டை மேற்கு இந்திய தீவுக்கள் அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
கான்பூர் டெஸ்ட்.
டிசம்பர், 1959
ஆஸ்திரேலிய
அணிக்கு எதிராக.
9 விக்கெட்டுக்கள் ஒரே இன்னிங்சில் எடுத்த இரண்டாவது இந்திய பவுலர் ஜெசு பட்டேல். இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற இவரது அருமையான பவுலிங் உதவியது.
முதலில் ஆடிய இந்திய அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி எடுத்த ரன்கள் 219.
அதிகமான ஓவர்களை போட்ட, ஆப் பிரேக் பவுலர் ஜெசு பட்டேல் தனது சாமர்த்தியமான பவுலிங்கால் ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்தார்.
நார்மன் ஓநில் விக்கெட்டை எடுத்தவர் சந்து போர்டே.
மற்ற 9 விக்கெட்டுக்களையும் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து அசத்தியவர் ஜெசு பட்டேல்.
இவரது பவுலிங்
35. 5 ஓவர்கள்.
16 மெய்டன்கள்.
69 ரன்கள்.
9 விக்கெட்டுக்கள்.
இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் ஜெசு பட்டேல். ஜெசு பட்டேலின் அபாரமான பந்து வீச்சு, வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்று தந்த 14 விக்கெட்டுக்கள், இந்திய அணிக்கு வெற்றி பெற்று தந்தது.
அஹமதாபாத் டெஸ்ட்.
நவம்பர், 1983
மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு எதிராக.
9 விக்கெட்டுக்கள் ஒரே இன்னிங்சில் எடுத்த மூன்றாவது இந்திய பவுலர் கபில் தேவ்.
முதல் இன்னிங்ஸ் மேற்கு இந்திய தீவுக்கள் அணி ரன்கள் 281. இந்திய அணி 241
இரண்டாவது இன்னிங்ஸ் மேற்கு இந்திய தீவுக்கள் அணி ரன்கள் 201.
இந்த இன்னிங்சில் கபில் தேவ் தனது பவுலிங் திறமையை வெளிப் படுத்தினார்.
முதல் விக்கெட்டை பல்விந்தர் சந்து எடுத்தார்.
அடுத்த 9 விக்கெடுக்களும் கபில் தேவ் வசம் வந்தன.
30.3 ஓவர்கள்.
6 மெய்டன்கள்.
83 ரன்கள்.
9 விக்கெட்டுக்கள்.
ஆனால், கபில் தேவின் ஒரு இன்னிங்ஸ் 9 விக்கெட்றடுக்கள் முயற்சி கைகொடுக்கவில்லை.
242 ரன்கள் வெற்றி இலக்கை அடைய முடியாமல், இந்திய அணி தோல்வியை தழுவியது.