ஷேன் வார்னேவுக்கு முதல் ஆண்டு அஞ்சலி!

ஷேன் வார்னேவுக்கு முதல் ஆண்டு அஞ்சலி!

ஓராண்டுக்கு முன் இதே நாளில் (மார்ச் 4) ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே உலகமே அதிர்ச்சி அடையும் வகையில் மரணமடைந்தார். தனது நண்பர்களுடன் விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்றபோது அவருக்க மரணம் நேர்ந்தது.

கிரிக்கெட் விளையாட்டில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர் ஷேன் வார்னே. கடந்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி வார்னேவின் மானேஜர், 52 வயதான ஆஸி. வீர்ர் வார்னே மறைந்த தகவலை அறிவித்தார்.

முதலில் கிடைத்த தகவலின்படி வார்னே, ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் அவர், இயற்கையாகவே மரணமடைந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். தாய்லாந்தில் விடுமுறையை கழிக்கச் சென்ற அவர், ஹோட்டலில் தங்கியிருந்தபோது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

வார்னேக்கு ஏற்கெனவே ஆஸ்துமா மற்றும் இதயநோய் பிரச்னைகள் இருந்துவந்துள்ளன. மேலும் அவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கமும்,

அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் பங்கேற்று குடிக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் தங்கியிருந்த விடுதியில் அவருக்கு திடீர் நெஞ்சுவில ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் உடன் வந்து சிகிச்சை அளித்த போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று அவரது மானேஜர் தெரிவித்திருந்தார்.

சிவப்பு பந்து கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் ஷேன் வார்னேதான். அவரது சாதனை இன்றளவும் தொடர்கிறது. ஆஸ்திரேலிய அணிக்காக பந்து வீசி அவர் 708 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவரும் அவர்தான்.

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டியில் அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். டி20 லீக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்திருந்த வார்னே, பின்னர் கிரிக்கெட் வர்னணையாளராக இருந்தார்.

1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக முதன் முதலாக விளையாடத் தொடங்கிய ஷேன் வார்னே, 145 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார், 194 ஒரு நாள் சர்வதேச

போட்டிகளிலும் வெள்ளை நிற பந்துவீச்சில் விளையாடி 293 விக்கெட்டுகளை எடுத்தார். 1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஆஷஸ் தொடர் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் வார்னேதான்.

சமீபத்தில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய தயாரிப்பாளர் மைக்கேல் குட்ன்ஸ்கியுடன் பிரபல பாடகர் எட் ஷிரீன் “விஸிட்டிங் ஹவர்ஸ்” என்னும் பாடலை பாடி வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் திரண்டிருந்தனர். முன்னதாக ஷிரீன், வார்னே குடும்பத்தினரிடம் வார்னே, அவரது மனைவி, மற்றும் ஷிரின் சேர்ந்து இருக்கும் படத்தை பரிசாக அளித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com