கருவளையம் மறைய...
* தக்காளிச்சாறு, எலுமிச்சைச்சாறு இரண்டை யும் சம அளவு கலந்து கண்களின்கீழே தடவி, பத்து நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவி வர, படிப் படியாகச் சரியாகி விடும்.
* உருளைக் கிழங்கைக் கழுவி, தோலுடன் துருவிச் சாறெடுத்து, அந்தச் சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சில நிமிடங்கள் கழித்து எடுத்துவர, கருவளையம் மறையும்.
* பாதாம் எண்ணெயை தினமும் கண்களின் கீழே தடவி வர, கருவளையம் நீங்கும்.
* காய்ச்சாத பாலை கண்களைச் சுற்றித் தடவுவதும் நல்ல தீர்வாகும்.
* கண் கருவளையத்தைப் போக்க, ஒரு மெல்லிய வெள்ளைத் துணியை மிதமான வெந்நீரில் நனைத்து, கண்களின் மீது வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
கழுத்துக் கருமை நீங்க….
* தயிர், எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவை தேவையான அளவு எடுத்துக் கலந்து கொள்ளவும்.
* இந்த பேஸ்ட்டை கழுத்தில் கருமை இருக்கும் பகுதியில்தடவி 30 நிமிடங்களுக்குப் பின் கழுவவும். இதை அடிக்கடி செய்துவர, கருமைபடிப்படியாக நீங்கும்.
* நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து, கழுத்துப் பகுதியில் தடவி மசாஜ்செய்தால், சுருக்கம், கறுப்பு வளையங்கள் படிப்படியாக நீங்கும்.
முகத்தில் கரும் திட்டுகளை நீக்க…
* சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள்காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப்போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்துநன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்தமுறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு (கருந்திட்டு) மறைந்து விடும்.