எலும்பு தேய்மான பிரச்சனையா? இதை சாப்பிடுங்க!

Bone health
Bone healthIntel
Published on

சிறு வயது குழந்தை முதல் பெரியர்வர்கள் வரை தற்போது இந்த எலும்பு தேய்மான பிரச்சனையை சந்திக்கின்றனர். எலும்பு பலம் பெற கேல்சியம் சத்து தேவை. 30 வயது ஆனாலே பெரும்பாலானோர் இந்த எலும்பு பிரச்சனையை சந்திக்கின்றனர். இந்த எலும்பு தேய்மானத்தை போக்க என்ன சாப்பிட வேண்டும் என்று யாருக்கும் தெரியாது. எதில் கேல்சியம் சத்து உள்ளது,. எந்த உணவால் எலும்பு தேய்மான பிரச்சனையை சரிபடுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

துவரம் பருப்பு: பெரும்பாலான வீடுகளில் துவரம் பருப்பை வாரம் இருமுறையாவது சமைப்போம். இதில் கால்சியம், புரோட்டீன், மற்றும் இரும்பு சத்து காணப்படுகிறது.

நட்ஸ் மற்றும் விதைகள்: பாதாம் பருப்பு: பாதாம் பருப்பில் கால்சியம் மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான கொழுப்பு சத்து, புரோட்டின் மற்றும் வைட்டமின் ஈ காணப்படுகிறது. இதனைஉணவுக்கு இடையே பசி எடுக்கும் பொழுது ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

கேல் (kale): மற்றொரு கால்சியம் நிறைந்த உணவு கேல். இதில் கால்சியம் தவிர வைட்டமின் கே மற்றும் சி காணப்படுகிறது. இதையும் நாம் சாலட், ஸ்மூத்தி போன்றவைகளாக செய்து சாப்பிடலாம்.

கசகசா: கசகசாவை நாம் அதிகமாக பயன்படுத்த தவறிடுகிறோம். ஆனால் இதில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. ஆகவே முடிந்த அளவு கசகசாவை உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

ஆளி விதைகள்: ஆளி விதைகளில் கால்சியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது. இதனையும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் ஒரு கூடுதலாக சேர்த்து சாப்பிடலாம்.

கொண்டைக்கடலை: கொண்டைக்கடலை கால்சியம் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்தின் சிறந்த ஆதாரம். இதனை குழம்பு, சாலட், சூப்பாக சாப்பிடலாம் அல்லது வேகவைத்து தாளித்த கொண்டைக்கடலையை மாலை நேரங்களில் சாப்பிடலாம்.

பச்சை இலை காய்கறிகள்: கீரை: தினம் ஒரு வகையான கீரையை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை நாம் அறிவோம். ஆனால் அதனை பின்பற்ற தவறி விடுகிறோம். கீரையில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் தவிர கால்சியம் அதிக அளவில் உள்ளது. கீரைகளை சாலடுகளில் பச்சையாக சேர்த்து சாப்பிடுவது இன்னும் சிறப்பானதாக அமையும். பச்சையாக சாப்பிட பிடிக்காதவர்கள் கீரை கடையல், மசியல், பொரியல் போன்று சமைத்து சாப்பிடலாம்.

சியா விதைகள்: சியா விதைகளில் கால்சியம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. இதனை ஸ்மூத்திகள், தயிர் ஓட்ஸ் கஞ்சி போன்றவற்றில் தூவி சாப்பிடலாம்.

பச்சை பயிர்:பச்சை பயிரில் கால்சியம், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது. இதனை அப்படியே வேகவைத்து சாப்பிடுவதை விட இதனை முளைகட்டி சாப்பிடுவது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

தண்டுக்கீரை: தண்டு கீரையிலும் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி காணப்படுகிறது. இதனை சூப்பாகவோ அல்லது பருப்பு சேர்த்து மசியலாகவோ செய்து சாப்பிடலாம்.

வெந்தயக்கீரை: வெந்தயக்கீரையில் காணப்படும் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து காரணமாக இதனை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதனை சப்பாத்தியாகவோ அல்லது சாம்பாராகவோ செய்து சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com