FIFA தரவரிசை: முதல் 100 இடங்களுக்குள் நுழைந்த இந்திய அணி!

இந்திய ஆண்கள் கால்பந்து அணி
இந்திய ஆண்கள் கால்பந்து அணி
Published on

இந்திய ஆண்கள் கால்பந்து அணி 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக  சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) வெளியிட்டுள்ள அணிகளின் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 99-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் பெங்களூருவில் நடந்த SAFF சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் வலுவான அணிகளான லெபனான் மற்றும் குவைத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 20) FIFA வெளியிட்ட அணிகளுக்கான தரவரிசையில் குவைத் நாடு நான்கு இடங்கள் முன்னேறி 137-வது இடத்தில் உள்ளது. அதே வேளையில் லெபனான் இரண்டு இடங்கள் முன்னேறி இந்தியாவிற்கு அடுத்த இடமான 100-வது இடத்தில் உள்ளது.

இதற்கு முன்பு இந்தியா கால்பந்து அணி FIFA தரவரிசை பட்டியலில், 1996 இல் 94-வது இடத்திலும்,1993 இல் 99-வது இடத்தையும், 2017 மற்றும் 2018 இல் 96-வது இடத்தையும் பிடித்தது. இதை தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா 99வது இடத்தைப் பிடித்துள்ளது. FIFA தரவரிசை பட்டியலில் உலக சாம்பியனான அர்ஜென்டினா தொடர்ந்து முதலிடத்திலும், பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com