முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை!

Cricket player
Cricket player
Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க நிரோஷன் சில மர்ம நபர்களால், வீட்டின் வெளியே சுட்டுக்கொல்ல பட்டிருக்கிறார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளில் அடிக்கடி இப்போது துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெறுகிறது. அதுவும் சமீபக்காலமாக இந்த சம்பவங்கள் அதிகமாகவே நடைபெறுகிறது. பல பாதுகாப்புகளை தாண்டி எளிதாக துப்பாக்கிசூடு போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இலங்கை கிரிக்கெட் அணியில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணியில் 2002ம் ஆண்டு நிரோஷன் இடம் பெற்றிருந்தார். அதேபோல் அந்த அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். தற்போது 41 வயதுடைய இவர் இலங்கையின் அம்பலாங்கொடை என்ற பகுதியில் வசித்து வந்தார். அம்பலாங்கொடையில் தமது வீட்டு முன்பாக தனியாக தம்மிக்க நிரோஷன் நின்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே தம்மிக்க நிரோஷன் உயிரிழந்தார்.

இவர் சில காலங்களுக்கு முன்தான் துபாயிலிருந்து இலங்கை வந்தார். ஆகையால், அங்கு ஏதேனும் சிக்கலில் மாட்டியிருந்தாரா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் பொறுத்தவரை இதுவரை இவர் எந்த வழக்குகளிலும், சிக்கல்களிலும் இல்லை. ஆனால், சமீபக்காலமாக இவர் வசித்து வந்த பகுதியில் அடிக்கடி இவ்வாறு நடப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

இதையும் படியுங்கள்:
நாளை காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு நாள் விழா கருத்தரங்கம்!
Cricket player

அதேபோல், இவருக்கு அம்பலாங்கொடையில் நிழல் தாதா ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.  20-வது வயதில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை கைவிட்ட தம்மிக்க நிரோஷன், இளம் வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து விலகுவதற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இதுவரை கொலையாளிகள் பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com