இந்தியாவில் கிரிக்கெட்டை தாண்டி பல சர்வதேச போட்டிகள் இருக்கின்றன... அவை என்னென்னு தெரியுமா..?

Indian sports
Indian sports
Published on

இந்தியாவில் கிரிக்கெட்டைத் தாண்டி பல சர்வதேசப் போட்டிகள் இருக்கின்றன... அவை என்னென்னு தெரியுமா? இந்தியாவின் விளையாட்டு உலகில் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில்; அதோடு ஹாக்கி, மல்யுத்தம், தடகளம் போன்ற ஒலிம்பிக் சார்ந்த போட்டிகளும் அவ்வப்போது கவனத்தைப் பெறுகின்றன. ஆனால், அதேநேரம் பல சர்வதேச விளையாட்டுகள் இன்னமும் ஒலிம்பிக் அல்லது உலக அங்கீகாரம் இல்லாததாகவும் உள்ளன. இவற்றில் ரக்பி(rugby), பேஸ்பால்(baseball), ஸ்குவாஷ்(squash), பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர்(snooker) போன்றவை அடங்கும்.

என்னதான் இவைகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டாலும்; ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பகுதியாகக்கூட இவை இல்லை. இதோடு போலோ(polo), லாக்ரோஸ்(lacrosse), சர்ஃபிங்(surfing), இ-ஸ்போர்ட்ஸ்(e-sports), கேரம்(carrom) மற்றும் செபக் தக்ரா(sepak takraw) ஆகியவையும் அடங்கும். இந்த விளையாட்டுகளும் பல சர்வதேசக் கூட்டமைப்புகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப்களைக் கொண்டுள்ளன. இருப்பினும் அவை இந்தியாவில் வெகு ஜனங்களைக் கவராமல் இன்னும் வெகு தொலைவில் உள்ளன.

ஏன் இந்த நிலை?

அவற்றின் குறைந்த பிரபலத்திற்கான காரணங்கள் கலாச்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு (Cultural and Structural) சார்ந்தவை. கிரிக்கெட்டின் வரலாற்று மரபு, அதன் வணிக வெற்றி மற்ற விளையாட்டுகளை அதிகளவு மறைக்கிறது. இது மக்களின் ஈடுபாடு அல்லது விளையாட்டுகளில் முதலீடு செய்ய விரும்பும் ஸ்பான்சர்களின் (Sponsors) கவனத்தை திசைதிருப்புகிறது. இதோடு ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுகளுக்கான உள்கட்டமைப்பு மிகக் குறைவு; சொல்லப்போனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சில அகாடமிகள் அல்லது அடிமட்ட அளவிலான திட்டங்கள் (Grassroots programs) மட்டுமே உள்ளன.

இதனால் ஊடக கவரேஜ்(Media coverage) குறைவாகவே உள்ளது. அதன் தொடர்ச்சியாக பல பள்ளிகள் இந்தத் துறைகளை அரிதாகவே மாணவர்களிடம் ஊக்குவிக்கின்றன.இறுதியில் பரந்த மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு செல்லாமல் தடுக்கப்படுகிறது. கூடுதலாக, இந்த விளையாட்டுகளில் பலவற்றிற்கு ஒலிம்பிக் அங்கீகாரம் இல்லாதது, அரசாங்க நிதியுதவி மற்றும் அதற்கான நிறுவன ரீதியிலான ஆதரவையும் (Institutional support) குறைக்கிறது.

இதில் பங்கேற்ற வீரர்களின் நிலை எப்படி இருக்கும்?

நாட்டு மக்களிடம் போதுமான வெளிச்சமின்மை இல்லாதபோதிலும், இது போன்ற சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்குச் சில கொடுப்பனவுகள்(allowances) இருக்கின்றன. உலக சாம்பியன்ஷிப் அல்லது ஆசிய போட்டிகளில்(continental tournaments) இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு, இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India(SAI) கீழ் அரசாங்க உதவித்தொகை, பயணக் கொடுப்பனவுகள்(allowances) மற்றும் பயிற்சி ஆதரவை பெற தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். இதில் விதிவிலக்கான(Exceptional) வீரர்கள் குறிப்பிடத்தக்க சர்வதேச வெற்றியைப் பெற்றால் அவர்களுக்கு ரொக்க வெகுமதிகள், பொதுத்துறை பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் மற்றும் ஓய்வூதியங்கள் கிடைக்கலாம். இதோடு சில தொடக்க நிலை தனியார் கூட்டமைப்புகள் மற்றும் ஸ்பான்சர்கள் அவ்வப்போது உதவித்தொகைகள் அல்லது ஆதரவுகளை வழங்குகின்றன. இருப்பினும் இவை கிரிக்கெட் ஒப்பந்தங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான லாபகரமானவையே.

கிரிக்கெட்டைத் தாண்டிய சர்வதேச விளையாட்டுகள் இந்தியாவில் பிரபலமாகிவிட்டால், நாடு இளைஞர்களைச் சோர்வடையாமல் பல துறைகளில் ஆராய ஊக்குவிக்கும்; ஒரு பன்முகத்தன்மை(diverse sporting culture) கொண்ட விளையாட்டு கலாச்சாரத்தைப் பெறும். கொஞ்சம்கொஞ்சமாக இந்தியாவின் விளையாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.

இறுதியில் இந்தியாவின் நற்பெயர் பல்துறை விளையாட்டு நாடாக வளர்ந்து, தேசிய பெருமையை அதிகரித்து; வல்லரசு நாடுகளுக்கு இணையான பல ஒலிம்பிக் வெற்றிகளைக் குவிக்க வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com