உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க இந்த பழங்களை எடுத்து கொண்டால் போதும்!

மாதிரி படம்
மாதிரி படம்

நவீன காலத்தில் உள்ள உணவு பழக்கங்கள் தலைகீழாக மாறிவிட்டது. இதனால் பலருக்கும் அந்த நோய், இந்த நோய் என வந்துகொண்டே தான் இருக்கிறது, குறிப்பாக இதய நோய் என்பது தற்போது இளைஞர்கள் வயதிலேயே வர தொடங்கிவிட்டது. அப்படி என்ன சிறு வயதில் இதய பிரச்சனை வருகிறது என பலரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இது மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்க உங்கள் உணவு பழக்கத்தில் இந்த பழங்களை சேர்த்தால் போதும்.

வாழைப்பழம்

நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 மற்ரும் சி உள்ளது. இவை மூன்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

சிவப்பு திராட்சை

அதிக ஆக்ஸிஜனேற்றிகள், பாலிஃபீனால்கள், நார்ச்சத்து மற்றும் ரெஸ்வெராட்ரோல் கொண்ட சிவப்பு திராட்சைகள் வீக்கத்தை குறைக்க உதவும்

பப்பாளி

பப்பாளி பொட்டாசியம் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற இதயத்திற்கு உகந்த பல ஊட்டச்சத்துக்களை கொண்டது.

பெர்ரி

வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றான பெர்ரி இதய நோய் அபாயத்தை குறைக்கும்.

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள பெக்டின், அதிக கொழுப்பை கட்டுப்படுத்தும், அதே வேளையில் எடை பிரச்சனைகளை நிர்வகிக்க உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com