

இந்திய அணியின் முன்னாள் வீரரும் , கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று போற்றப்படும் சுனில் கவாஸ்கர், சமீபத்திய நேர்காணலில் இந்திய அணியின் மீதான தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அயர்லாந்து சுற்றுப் பயணத்தின் போது இந்திய அணி 2–0 என்ற அளவில் படு தோல்வி அடைந்தது , அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை பற்றி அவர் ஆஜ் தக் என்ற வட இந்திய சேனலுக்கு ஒரு நேர் காணல் அளித்திருந்தார்.
புதிதாக டி20 கேப்டனாக பதவியேற்ற ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த தொடர் மோசமான தொடக்கமாக இருக்கிறது. அவர் தனது முதல் தொடரிலேயே எந்த ஒரு முத்திரையும் பதிக்காமல் விட்டுவிட்டார். அபிஷேக் ஷர்மா , சஞ்சு சம்சன் மீது நம்பிக்கை வைத்த நிர்வாகம், வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகத்தை தள்ளி வைத்தது தவறாகும். இந்திய அணி நிர்வாகம் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை நீக்கிவிட்டு வைபவை கட்டாயம் இங்கிலாந்து தொடரில் களம் இறக்கியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மேலும் கவாஸ்கர் கூறுகையில் "நான் ஒரு மாத காலமாக வைபவ் , தனது திறமையான ஆட்டத்தினால் இது போட்டிகளும் விளையாடி இருக்கலாம் என்று கூறி வந்தேன். ஒரு போட்டியில் வைபவுடன் அபிஷேக் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராகவும் , மற்றொரு போட்டியில் அவரை சஞ்சு சாம்சங் உடன் இணைத்து களமிறக்கி இருக்கலாம். ஆனால், அவர்கள் அது போன்று செய்யவில்லை.
நான் வைபவை அந்த போட்டியை வென்று கொடுப்பார் என்று கூறவில்லை. அதே நேரம், அவர் 10–15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், அந்த சிறுவனுக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தால் அந்த இரண்டு போட்டிகளும் சிறந்த வாய்ப்பாக இருந்திருக்கும்.இனிமேல் உங்களால் அவரை காத்திருக்க வைக்க முடியாது. இங்கிலாந்தில் நடக்கும் முதல் போட்டியிலேயே வைபவை களம் இறக்க வேண்டும் என்பதுதான் விஷயம்.
ஃபார்மில் இல்லாத பேட்ஸ்மேன்களை எல்லாம் உட்கார வைத்துவிட்டு , வைபவ் சூர்யவன்ஷியை விளையாட விடுங்கள் அவ்வளவு தான். ஆனால் , ஜூலை 1 தேதி நடக்கும் இங்கிலாந்து போட்டியில் அவர் விளையாடிய ஆக வேண்டும்.அயர்லாந்தில் நடைபெற்ற மோசமான தோல்வியை பார்க்கும் பொழுது தற்போதைய அணியின் தேவை அவர்தான். இரண்டு போட்டிகளிலும் இந்தியா இலக்கை விரட்டினாலும் அவர்களால் அடைய முடியவில்லை , என்று அந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் கடுமையாக வாதிட்டார்.
உங்களுக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை மாற்ற முடியாவிட்டால் , வைபவை 3 வது வீரராக களம் இறக்க வேண்டும். ஒருவேளை அவர் போட்டியில் சொதப்பும் வாய்ப்பு உள்ளது . ஆனால் , வைபவ் பார்மிற்கு வந்துவிட்டால் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுக்கலாம். அவர் அந்த அணியை நிலைகுலைய வைத்து விடுவார் , என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் வீரர் ஒருவர் இந்த அளவிற்கு ஒரு இளம் வீரர் மீது நம்பிக்கை வைத்தது ஆச்சரியமில்லை. உண்மையான வீரர்களை பொறுத்தவரை தங்கள் நாடும் தங்கள் அணியும் வெற்றி பெற வேண்டும் என்பதே, முதல் விருப்பமாக இருக்கும். அதற்காக , அவர் இந்த அணியின் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.