ஷுப்மன் கில்லுக்கு டோஸ் விட்ட கவாஸ்கர்!

ஷுப்மன் கில்லுக்கு டோஸ் விட்ட கவாஸ்கர்!

இந்தூரில் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரன்கள் எடுக்க இந்தியா கடுமையாக போராட வேண்டியிருந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி ஆஸியின் நாதன் லியான் மற்றும் மாத்யூ குஹ்னிமானின் சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 109 ரன்களுக்கு சுருண்டது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறாத ஷுப்மன் கில் ஒரு வழியாக மூன்றாவது டெஸ்டில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். கே.எல்.ராகுலுக்கு பதிலாக அவர் அணியில் இடம்பெற்றார். எனினும் களத்தில் நடந்துகொண்ட முறைகண்டு இந்திய அணியின் முன்னாள் வீர்ரான சுநீல் கவாஸ்கர் கொந்தளித்தார்.

இந்திய அணி 7-வது ஓவரை சந்தித்தபோது, கில், கேமரூன் வீசிய பந்தை தட்டிவிட்டு அவசரம் அவசரமாக ஒரு ரன் ஓடினார். ரன் அவுட் ஆகாமல் இருக்க வேகமாக ஓடியதில் தொடுகோட்டை (கிரீஸ்) அடைந்த கில், கீழே விழுந்த்தில் அவருக்கு லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ உதவி கோரியதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இந்த போட்டியின் வர்னணையாளரான கவாஸ்கர், “ஷுப்மன் கில் கீழே விழுந்ததில் சிராய்ப்பு ஏற்பட்டதால் மருத்துவ உதவிக்காக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஆனால், கில் இந்த ஓவர் முடியும் வரை காத்திருந்திருக்கலாம். வேகப்பந்து வீச்சாளரான கேமரூன் நான்கு பந்துகளை வீசிவிட்டார். இப்போது அவருக்கு மேலும் இரண்டு பந்துகளை வீச நேரம் கிடைத்துள்ளது. கில்லுக்கு அடிபட்டுவிட்டது என்பது உண்மைதான். ஆனால், அவர் வலியை பொறுத்துக் கொண்டு இன்னும் இரண்டு பந்துகளை சந்தித்திருக்கலாம். இப்போது கேமரூனுக்கு ஓய்வு கிடைத்திருப்பதால், அடுத்த இரண்டு பந்துகளை அவர் இன்னும் வேகத்துடன் வீசக்கூடும். ஷுபம் கில் இப்போது ரன்னர் இடத்தில்தான் இருக்கிறார். பந்துவீச்சை சந்திக்கும் இடத்தில் இல்லை. இதை ஏன் அவர் சிந்திக்கவில்லை என்று கடிந்து கொண்டார்.

மற்றொரு வர்னணையாளரான ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீர்ர் மாத்யூ ஹைடன் கவாஸ்கரிடம், “நீங்கள் ரொம்ப கோபமாக இருக்கிறீர்கள் ஸன்னி (கவாஸ்கரின் செல்லப் பெயர்)” என்றார். அதற்கு கவாஸ்கர் பதிலளிக்கையில், “ஆமாம். நாம் நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்னும் இரண்டு பந்துகளே அந்த ஓவரில் வீசப்பட வேண்டும். ஷுப் கில் ரன்னர் இடத்தில் இருக்கிறார். அவர் பேட் செய்யும் இடத்தில் இருந்திருந்தால் அவருக்குள்ள அசெகளரியத்தை என்னால் புரிந்து கொண்டிருக்க முடியும். ரன்னர் இடத்தில் இருந்த்தால் ஏன் அந்த ஓவர் முடியும் வரை அவர் காத்திருக்கவில்லை என்பதுதான் எனது கேள்வி” என்றார்.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய 109 ரன்களுக்கு சுருண்டது. விரா கோலி 22

ரன்களும், ஷுப்மன் கில் 21 ரன்களும் எடுத்தனர். ஆஸி. பந்துவீச்சாளர்களான மாத்யூ 5 விக்கெட்டுகளையும், நாதன் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com