உலகக் கோப்பை ஹாக்கி தொடர். உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி.

உலகக் கோப்பை ஹாக்கி தொடர். உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி.

15 வது ஹாக்கி உலகக் கோப்பை ஆக்கி தொடர் இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் இரண்டு நகரங்களில் நடந்து வந்தது. நேற்றைய தினம் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஜெர்மனி அணி பெல்ஜியம் அணியை ஷீட் அவுட் முறையில் 5 - 4 என்ற முறையில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.

சம பலம் வாய்ந்த பெல்ஜியம் - ஜெர்மனி அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் அபாரமாக விளையாடியது. இரு அணிகளும் கோலுக்காக கடுமையாக போராடி கோல்களை அடித்தன. முதல் பாதியில் பெல்ஜியம் இரண்டு கோல்கள் முன்னிலையில் இருந்த நிலையில், ஜெர்மனி தனது அசுர வேக ஆட்டத்தை வெளிப்படுத்தி பதிலுக்கு இரண்டு கோல்கள் அடித்தது. அதன் பிறகும் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து ஷீட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 5 கோல்கள் அடிக்க... ஜெர்மன் கோல்கீப்பர் சிறப்பாக செயல்பட்டதால் பெல்ஜியம் அணியால் 4 கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஜெர்மனி அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையை தட்டிச் சென்றது.

மூன்றாவது, நான்காவது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தைப் பெற்றது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com