பொடுகுத் தொல்லை போக்கும் பாட்டி வைத்தியம்

பொடுகுத் தொல்லை போக்கும்  பாட்டி வைத்தியம்
Published on

பொடுகுத் தொல்லை எதனால் ஏற்படுகிறது?

கூந்தல் உதிர்வதற்கு முக்கியக்காரணம் தலையில் பொடுகு சேருவது தான். தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை நிறையப்பேர் பொடுகுத் தொல்லைக்கு ஆளாகிறார்கள். தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் விடுவது, சுத்தமாகப் பராமரிக்காதது,  ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், போன்றவை பொடுகு தோன்ற முக்கியக் காரணங்கள் ஆகும்.

சரி, பொடுகுத் தொல்லை தீர என்ன செய்யலாம்?

* கைப்பிடியளவு சின்ன வெங்காயம் எடுத்து, தோல் நீக்கி, நைசாக அரைத்து தலையில் தேய்த்த பின்னர், முப்பது நிமிடங்கள் கழித்து குளிக்கலாம்.

* மிளகைப் பொடி செய்து சிறிது பாலுடன் சேர்த்து தலையில் தேய்த்து, 15 நிமிஷம் கழித்து குளித்தால் சில நாட்களில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

* தயிர், முட்டை மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

* துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.

* ரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் அதை அரைத்துக்கொள்ளவும். இதை தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். முடி வளர்ச்சிக்கு உதவும்.

* கைப்பிடி வேப்பிலைகளை பேஸ்ட்போல அரைத்துக் கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, முப்பது நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இதன் கசப்பு தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தலைமுடிக்குத் தீங்கிழைக்கும் நுண்ணியிரிகளை அழித்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com