‘சிறந்த தேடல்களே என்னை நல்ல நிலையில் வைத்திருக்கிறது:’ ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து!

‘சிறந்த தேடல்களே என்னை நல்ல நிலையில் வைத்திருக்கிறது:’ ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து!
Published on

ந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் உட்பட, ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. நேற்று முன்தினம் டொமினிகாவில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் தனது அபாரமான பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் ஆட்டக்காரர்களை நிலைதடுமாறச் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின், முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 33வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்திருக்கிறார் அஸ்வின்.  

முன்னதாக, சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டிருந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்குக் காரணம் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாததும் ஒரு காரணமாக பல்வேறு தரப்பினராலும் கருத்துக் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸிலேயே ஐந்து விக்கெட்டுகளை எடுத்து, உலக தரவரிசைப் பட்டியலில் தான் சிறந்த பௌலர் என்பதை நிரூபித்து இருக்கிறார் அஸ்வின்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வினிடம் கேட்டபோது, “கிரிக்கெட் உலகில் எந்த ஒரு வீரரும் தாழ்வுகள் இல்லாமல் உயர்ந்த நிலைக்குச் சென்றதில்லை. ஒருவருக்கு தாழ்வு ஏற்படும்போது, அது அவரை இரண்டு விதமான நிலைகளுக்கு இட்டுச் செல்கிறது. ஒன்று அவர் துக்கப்படுவார் அல்லது அது குறித்து புகார் செய்துவிட்டு சென்று விடுவார். இரண்டாவது அந்தத் தாழ்விலிருந்து கற்றுக்கொள்வது. நான் தாழ்வுகளிலிருந்து கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். சிறந்த தேடல்கள்தான் என்னை எப்போதும் நல்ல நிலையில் வைத்திருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com