

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25வது லீக் போட்டி குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.
நடப்பு ஐபிஎல் போட்டியில் இவ்விரு அணிகளும் கடைசியாக விளையாடிய 5 போட்டியில் குஜராத் அணி 3 போட்டியிலும், கொல்கத்தா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. ஒரு போட்டி சமனில் முடிந்ததால் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் கொல்கத்தா அணி உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 3 ஆட்டத்திலும், கொல்கத்தா ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களை எடுத்தது.
அதனை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் குஜராத் அணி 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.