

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேல்ஞ்சர்சை எதிர்கொள்கிறது.
குஜராத் 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியை கண்டுள்ளது. பெங்களூரு அணி 8 ஆட்டங்களில் ஆடி 6-ல் வெற்றி, 2 தோல்வியை கண்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்திலும், குஜராத் அணி 5-வது இடத்திலும் நீடிக்கிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி கொண்டதில் 4-ல் பெங்களூருவும், 3-ல் குஜராத்தும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 155 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதனை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய குஜராத் அணி அதிரடியாக விளையாடி இறுதியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 5-வது வெற்றியை பதிவு செய்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.