புஜாராவை அணியில் சேர்க்காதது ஏன்? ஹர்பஜன் சிங் சரமாரி கேள்வி!

Harbhajan singh  pujara
Harbhajan singh pujara
Published on

ந்திய தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதுகுறித்து யூட்யூப் சேனல் ஒன்றில் பேசிய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததற்கு காரணம் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இல்லாததே. ஆம்! விராட் கோலி மற்றும் கேல்.எல். ராகுல் மட்டுமே தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை விளையாடிய வீரர்கள். இந்திய அணியில் மற்ற அனைத்து அனுபவம் வாய்ந்த வீரர்களும் மாற்றப்பட்டனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், ப்ரஷித் கிருஷ்னா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாடவே இல்லை. எந்த யோசனைகளும் இல்லாமல் அணி வீரர்களை மாற்றியதற்கான காரணம் என்னவென்றே தெரியவில்லை.

இந்நிலையில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்திய அணியின் தோல்வியைப் பற்றி பேசினார். அதாவது வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடிய ரஹானே அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் எந்த காரணத்தினால் புஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் தெரியவில்லை.

அவர் விராட் கோலிக்கு நிகராக விளையாடி அசத்தியவர். குறிப்பாக வெளிநாடுகளில் புஜாரா அதிக ரன்கள் குவிப்பதில் சிறந்தவர். டெஸ்ட் போட்டிகளில் புஜாரா நிதானமாக விளையாடி அதிக நேரம் களத்தில் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் கொண்டவர். அதேபோல் பொறுமையாக விளையாடினாலும் அதிக ரன்கள் எடுக்கக்கூடியவரும் கூட. இவராலேயே இந்திய அணி பல கடினமான டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியை சந்தித்தது.

செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்ததற்கு ஒரே காரணம் கே.எல். ராகுல். அதேபோல் இரண்டாம் இன்னிங்ஸில் 131 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்தது. அதற்கு ஒரே காரணம் விராட் கோலிதான். விராட் கோலி ரன்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் இந்திய அணியின் ரன்கள் சொல்லமுடியாத அளவிற்கு இருக்கும். இந்திய அணியின் தோல்வி முதல் இன்னிங்ஸிலேயே தெரிந்துவிட்டது என்றும் ஹர்பஜன் சிங் கூறினார்.

மேலும் இதுகுறித்து ஆட்டமுடிவில் பேசிய ரோஹித் ஷர்மா பவுலர்ஸே சொதப்பியது போல் பேசியிருக்கிறார். இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்கா மணியில் இந்திய அணி பேட்டிங்கில் எவ்வளவு நன்றாக விளையாடியிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com