கூந்தல் வளர்ச்சி தரும் சீயக்காய்த்தூள்!

கூந்தல் வளர்ச்சி தரும் சீயக்காய்த்தூள்!

ன்றைய அவசர யுகத்துக்கேற்ப ரசாயனம் கலந்த ஷாம்புகளைத் தலைக்குத் தேய்த்துக் கழுவுவதால் முடி உதிர்தல், பொடுகு தொல்லை, முடி உடைதல், பேன், ஈறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்தத் தொல்லைகளைப் போக்க நம் கேசத்துக்கு இன்றியமையாதது மூலிகை சீயக்காய்த்தூள்தான். இன்றும் பலர் சீயக்காய் தேய்த்துத்தான் குளிக்கிறார்கள். அவர்களுக்கு முடி நரைக்காமல், முடி உதராமல் இருக்கிறது. கீழ்க்கண்ட பொருள்கள் கொண்டு மூலிகை சீயக்காய்த்தூள் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையானவை:

சீயக்காய் – 1 கிலோ (முடி வளர்ச்சிக்கு), பச்சை உளுந்து – 50 கிராம் (குளிர்ச்சி, பொடுகு அகற்ற),  பச்சரிசி – 50 கிராம் (மிருதுவாக்க), வெட்டிவேர் – 50 கிராம் (மணம், குளிர்ச்சி), கடுக்காய் – 100 கிராம் (முடி உதிராமல்  இருக்க), நெல்லிக்காய் – 100 கிராம் (குளிர்ச்சி உண்டாக்க), செம்பருத்தி – 50 கிராம் (முடியை மென்மையாக்க), வேப்பிலை – 50 கிராம் (பேன், ஈறுகளை ஒழிக்க), சந்தன சக்கை – 50 கிராம் (குளிர்ச்சி + வாசனை (மணம்), கிச்சலி கிழங்கு - 50 கிராம் (வாசனை + மணம்), மகிழம்பூ – 50 கிராம் (மணம்), ரோஜாப்பூ – 100 கிராம் (குளிர்ச்சி + மணம்), பொன்னாங்கொட்டை (கொட்டை நீக்கவும் – ½ கிலோ (அழக்கு நீக்க), ரீட்டா – நுரை வருவதற்கு.

எல்லா பொருள்களையும் ஒரு பெரிய துணியில் போட்டு வெயிலில் இரண்டு நாட்கள் காய வைத்து, மிஷினில் அரைக்கவும். அரைத்து வந்தவுடன் அதை ஒரு துணியிலோ, அல்லது ஒரு பெரிய பாத்திரத்திலோ போட்டு ஆற வைக்கவும். பிறகு ஜலித்து 50 கிராம், 100 கிராம், கால் கிலோ, அரை கிலோ என்ற கணக்கில் பேக்கிங்  செய்து விற்பனை செய்யலாம். இதை ஆர்வத்தோடு செய்தீர்களானால் பணம் கிடைப்பதோடு அதிக வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள்.

எப்படி பயன்படுத்துவது?

ரண்டு டேபிள் ஸ்பூன் அளவு மூலிகை சீயக்காய்த் தூளை, மிதமான வெந்நீரிலோ, புளித்த மோரிலோ அரை மணி நேரம் ஊற வைத்து, பின் தலையில் தேய்த்து அலசவும். சோறு வடித்த கஞ்சி, கற்றாழை விழுது போன்றவை இருப்பினும் சேர்க்கலாம். தலைமுடி மிருதுவாக, பட்டு போல மின்னும்.கூந்தலும் கருகுருவென அடர்த்தியாக வளரம். குறிப்பாக, எந்த சீஸனிலும் வரண்டு போகாது.

மூட்டுவலி நிவாரண ஆயில்

ன்றைக் கால கட்டத்தில் எங்கு பார்த்தாலும் மூட்டுவலி தொல்லை அதிகமாக இருக்கிறது. அதற்கு வலி நிவாரண ஆயில் செய்வது எப்படி?

இதற்கு மூலப் பொருள்கள்:

ல்லெண்ணெய் – 1 கிலோ, முடக்கத்தான் கீரை – ½ லிட்டர்,  நொச்சி இலைச்சாறு – ½ லிட்டர்.

இந்த இரண்டு மூலிகைக் கீரைகளும் மூலிகை விற்பனை செய்பவர்களிடம் கிடைக்கும். இந்தக் கீரைகளை வாங்கி சுத்தம் செய்து அதிகத் தண்ணீர் ஊற்றாமல் சாறு எடுக்க வேண்டும். நல்லெண்ணெய் 1 லிட்டர் என்றால் இந்த இரண்டு சாறுகளும் சேர்ந்து 1 லிட்டர் அளவு எடுக்க வேண்டும். இவற்றை அடுப்பில் வைத்துக் காய்ச்ச வேண்டும்.

நன்றாகக் கொதித்து தைல பதம் வரும்போது இறக்கவும். மறுநாள் பாட்டிலில்  100 மில்லி கணக்கில் ஊற்றி வியாபாரம் செய்யலாம். வலியுள்ள இடத்தில் தடவுவதால் நாளடைவில் வலி குறையும். மூட்டு வலி உள்ளவர்கள் வாதம் சம்பந்தமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. நல்லெண்ணெய் (அல்லது) கடுகு எண்ணெயில் செய்தாலும் நன்மை கிடைக்கும். ஆனால் இதைத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். அதிக வலி இருக்கும்போது சூடான உமி, அல்லது கல் உப்பு ஒத்தடம் கொடுத்தால் நல்லது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com