ஜவ்வரிசியில் மறைந்திருக்கும் நன்மைகள்!

Hidden Benefits of javvarisi.
Hidden Benefits of javvarisi.
Published on

ங்களுக்கு ஜவ்வரிசி எதிலிருந்து தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா? நம்முள் பலருக்கு அதை எதிலிருந்து தயாரிக்கிறார்கள் என்பதே தெரியாது. மரவள்ளிக் கிழங்கிலிருந்து எடுக்கப்படும் ஸ்டார்சிலிருந்துதான் ஜவ்வரிசி செய்யப்படுகிறது. இதை சபுதானா, சௌவாரி, சாகோ என்றும் அழைக்கிறார்கள். முற்றிலும் ஸ்டார்சால் நிறைந்துள்ள சவ்ரிசியில் ரசாயனங்கள், செயற்கை இனிப்புகள் போன்ற எதுவும் இல்லாததால் பரவலாக அனைவரும் இதை விரும்புகின்றனர். உடல்நலம் சரியில்லாமல் இருப்பவர்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த உணவை தாராளமாக அளிக்கலாம். ஏனென்றால் ஜவ்வரிசி உடனடி ஆற்றலையும் செரிமான சக்தியையும் ஒருவருக்குக் கொடுக்கிறது. மேலும் உடலை குளிர்ச்சிப்படுத்துவதிலும் இது பங்குவகிக்கிறது. 

உடலில் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருக்கிறது. எனவே ஒருவர் உடல் எடை அதிகரிக்க விரும்பினால், ஜவ்வரிசி சிறந்த உணவாக இருக்கும். இதில் கணிசமான அளவு பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் ரத்த நாளங்கள் வழியே ரத்த ஓட்டம் சீராகப் பாய வழிவகுப்பதால், ரத்த அழுத்தம் குறைந்து, இதயத்திற்கான சிரமத்தைக் குறைக்கிறது. 

தசை வளர்ச்சிக்கு தேவையான சிறந்த மூலமாக ஜவ்வரிசி திகழ்கிறது. இது உடலில் சேதமடைந்த திசுக்கள் மற்றும் செல்களை குணப்படுத்த உதவி, மற்ற செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. செரிமான ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் ஜவ்வரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கல், அஜீரணம், வீக்கம் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் இது உதவுகிறது. இதில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்கள் நிறைந்துள்ளதால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து மூட்டு வலி அபாயத்தைக் குறைக்கிறது. வளரும் குழந்தைகளின் உணவில் ஜவ்வரிசியை சேர்ப்பதால் அவர்களின் எலும்பு பலப்படுகிறது. இதில் எளிய சக்கரை மற்றும் மாவுச்சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு  உதவுகிறது. 

உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிடுவதற்கான சிறந்த உணவாக ஜவ்வரிசியைத் தேர்வு செய்யலாம். ஏனெனில் அதில் அதிக ஆற்றல் இருப்பதால் உடல் சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி போன்றவற்றைத் தடுக்கிறது. உதாரணத்திற்கு ஒரு கப் ஜவ்வரிசியில் 540 கலோரிகள் நிறைந்துள்ளது. இதில் 152 மில்லிகிராம் மெக்னீசியம், 87 கிராம் கார்போஹைட்ரேட், 135 கிராம் மாவுச்சத்து, 30 மில்லி கிராம் கால்சியம், 16 மில்லி கிராம் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. 

இதைத் தவிர புரதம், கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் சிறிதளவு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com