இன்று இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஹாக்கி போட்டி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்!

இன்று இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஹாக்கி போட்டி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்!
spotik.in
Published on

ந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் என்றாலே பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஹாக்கி போட்டி இன்று இரவு 8.30 மணக்கு சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

7 வது ஆசிய ஹாக்கி சாம்பியன் டிராபி போட்டி சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த அணிகள் தற்போது அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று இரவு 8:30 மணிவில் நடைபெறுகிறது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் இந்திய அணி கலந்து கொண்ட 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. மேலும் ஒரு போட்டியில் ட்ராவில் முடிவடைந்துள்ளது. தற்போது இந்திய அணி 10 புள்ளிகளை பெற்று முன்னணியில் உள்ளது.

மேலும் இந்திய அணி உலக தரவரிசை பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 16வது இடத்தில் உள்ளது. அதேநேரம் இரண்டு அணிகளும் போட்டியில் வெற்றி பெற தீவிரம் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று விளையாட்டு ரசிகர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com