ஆரோக்கியம் தரும் பானி பூரி!

Healthy Pani Puri.
Healthy Pani Puri.
Published on

தினம்தோறும் இந்தியா முழுவதுமே கோடிக்கணக்கான மக்களால் விரும்பி உண்ணப்படும் ஈவினிங் ஸ்நாக்ஸ் எதுவென்றால் அது பானி பூரிதான். இந்தியா முழுவதும் பல பெயர்களில் இது மக்களின் சுவை நரம்புகளில் மின்சாரத்தை பாய்ச்சுகிறது. வட இந்தியாவில் 'கோல்கப்பா' என அழைக்கப்படும் பானி பூரி, மேற்கு வங்காளத்தில் 'புச்கா' என்றும் பீகாரில் 'குப்சுப்' என்றும் அழைக்கப்படுகிறது. 

இப்படி அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பானி பூரி ஆரோக்கியமானது தானா என்ற சந்தேகம் பலருக்கு இருந்து வருகிறது. அந்த சந்தேகம் உங்களுக்கும் இருந்தால் அதை ஆரோக்கிய உணவாக மாற்றுவதற்கு அட்டகாசமான சில வழிகள் உள்ளது. 

பானி பூரி சாப்பிடும் போது, கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் பானி பூரியை தேர்வு செய்து உட்கொள்ளுங்கள். இது மைதாவால் செய்யும் பானி பூரியை விட உடலுக்கு நல்லது. இதை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். பூரியை எண்ணெயில் போட்டு வறுக்காமல், ஹேர் பிரையர் பயன்படுத்தி வருப்பது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தாது. 

பொதுவாகவே பானி பூரியின் உள்ளே பிசைந்த உருளைக்கிழங்கை வைத்து சாப்பிடுவார்கள். அது அந்த அளவுக்கு சுகாதாரமாகத் தெரியாது. இதற்கு பதிலாக சத்து மிகுந்த நட்ஸ் மற்றும் தானிய வகைகளை உள்ளே வைத்து சாப்பிடலாம். இதற்காக வேக வைத்த சுண்டல், முளைகட்டிய பயறுகள் சிறந்தத் தேர்வாக இருக்கும். 

குறிப்பாக பானி பூரி சாப்பிடுவதற்கென்றே ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது. காலையிலும் மதிய நேரத்திலும் பானி பூரி சாப்பிட வேண்டாம். மாலை நேரத்தில் அதை சாப்பிடுவது நல்லது. பெரும்பாலும் ஐந்து முதல் ஆறு மணி அளவில் இதை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

அதிக உப்பு சேர்க்காமல் பானி பூரி ரசக்கலவையை தயாரிப்பது நல்லது. ஏனென்றால் அதிக உப்பு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே பச்சை மிளகாய், புதினா, புளி, வெல்லம் சிறிதளவு உப்பு மட்டுமே சேர்த்து வீட்டிலேயே காரமான பானி தயாரிக்கலாம்.  

இப்படி முற்றிலும் சுகாதாரமான முறையில் பானி பூரி வீட்டிலேயே நாம் தயாரித்து சாப்பிட்டால், அதிலிருந்தும் ஆரோக்கியத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com