‘நான் இறப்பதற்கு முன் தோனியின் சிக்ஸரை மீண்டும் பார்க்க வேண்டும்’ உணர்ச்சிப் பெருக்கில் கவாஸ்கர்!

‘நான் இறப்பதற்கு முன் தோனியின் சிக்ஸரை மீண்டும் பார்க்க வேண்டும்’ உணர்ச்சிப் பெருக்கில் கவாஸ்கர்!

டைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் கடந்த 14ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னைஅணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பதால் ஆட்டத்தின் முடிவில் தோனி உள்ளிட்ட அனைத்து சிஎஸ்கே அணி வீரர்களும் மைதானத்தை சுற்று வந்து ரசிர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது தோனி தன்னிடம் இருந்த கேப் மற்றும் ஜெர்சி போன்றவற்றை ரசிகர்களுக்கு வழங்கி தனது அன்பை பரிமாறினார்.

அப்போது முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்வர்  கேப்டன் தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராப் வாங்கினார். இதைக் கண்ட அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மிகவும் நெகிழ்ந்து போயினர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரிதாகப் பார்க்கப்பட்டது. தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது குறித்து சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டபோது, “சிஎஸ்கே வீரர்களும், தோனியும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன், நானும் அதனை ஒரு மறக்க முடியாத தருணமாக்க விரும்பினேன். அதனால் தோனி இருக்கும் இடத்தை நோக்கி ஆட்டோகிராப் வாங்க ஓடினேன். ஏனென்றால், இந்த சீசனில் அதுதான் சேப்பாக்கத்தில் தோனியின் கடைசிப் போட்டி. நிச்சயமாக சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் பட்சத்தில் மீண்டும் அவர் வருவார். இருந்தாலும், தோனியிடம் சென்று, நான் அணிந்திருந்த சட்டையில் ஆட்டோகிராப் இட சொன்னேன்.

அப்போது ஆட்டோ கிராப் போடுவதற்கு பேனா இல்லை. நல்ல வேளையாக அங்கிருந்த ஒளிப்பதிவாளர் ஒருவரிடம் மார்க்கர் பேனா இருந்தது. தோனி அந்த பேனாவை வாங்கி எனது சட்டையில் ஆட்டோகிராப் போட்டார். அது ஒரு நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. இந்திய கிரிக்கெட்டுக்காகப் பல சாதனைகளைச் செய்த ஒருவரிடம் இருந்து ஆட்டோகிராப் பெறுவது மிகவும் உணர்ச்சிகரமானது. நான் இறப்பதற்கு முன் 1983ம் ஆண்டு கபில் தேவ் வென்ற உலகக் கோப்பையையும், 2011ம் ஆண்டு தோனி அடித்த சிக்ஸையும் மீண்டும் ஒருமுறை பார்க்க விரும்புகிறேன்" என்று கலங்கிய கண்களுடன் நெகிழ்ச்சியாகப் பேசி உள்ளார் சுனில் கவாஸ்கர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com