ஐசிசி வெளியிட்ட புதிய விதிமுறைகள்... கிரிக்கெட் வீரர்களுக்கு வந்த புதிய சோதனை!

ஐசிசி வெளியிட்ட  புதிய விதிமுறைகள்... கிரிக்கெட் வீரர்களுக்கு வந்த புதிய சோதனை!
library.sportingnews.com
Published on

சிசி உறுப்பினர்கள் கலந்துரையாடி கிரிக்கெட் போட்டிகளில் நேரம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக விளையாட்டு என்றாலே பல விதிமுறைகள் விதிக்கப்படும். அதிலும் கிரிக்கெட் போட்டி என்றால் சொல்லவே தேவையில்லை, எக்கச்சக்கமான விதிமுறைகள் இருக்கும். ஆனால் அனைத்து வீரர்களுக்கும் அனைத்து விதிமுறைகளும் தெரியுமா என்று கேட்டால் சந்தேகம் தான்.

இதற்கு உதாரணம், அண்மையில் நடைபெற்ற ஐசிசி ஆடவருக்கான உலககோப்பை போட்டியில் கூட ஒரு நிகழ்வு நிகழ்ந்தது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் timed out முறையில் ஆட்டமிழந்தார்.

அதாவது, ஒரு வீரர் ஆட்டமிழந்த பின் அடுத்த வீரர் களத்திற்கு தாமதமாக வந்தால் time out முறையில் ஆட்டமிழக்க நேரிடும். ஆஞ்சலோ அதற்கான காரணம் கூறியும் கூட அவரை விளையாட அனுமதிக்க வில்லை. ஒரு முன்னணி வீரருக்கே இதுபோன்ற விதிமுறைகள் தெரியவில்லை. இதற்கு காரணம் கிரிக்கெட்டில் அவ்வளவு அதிகமான விதிமுறைகள் உள்ளதுதான்.

எதிரணிக்குக் கூடுதலாக ஐந்து ரன்கள்

அதேபோல் ஐசிசி மேலும் சில விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அதில் முதலாவதாக கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்குத்தான். ஒரு ஓவர் முடிந்த பின்னர் அடுத்த ஓவரின் முதல் பந்து வீச்சுக்கு 60 வினாடிகள் மட்டுமே இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை ஐந்து முறை இந்த விதிமுறையைத் தவறிவிட்டால் எதிரணிக்குக் கூடுதலாக ஐந்து ரன்கள் வழங்கப்படும் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது.

இதற்கான சோதனை இந்த ஆண்டு டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை செயல்படுத்தப்படும். அந்த ஐந்துமாதங்களில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் கடிகாரம் வைத்து சோதனை செய்ய ஐசிசி அறிவித்துள்ளது.

திருநங்கைகளுக்கு மகளிர் கிரிக்கெட்டில் இடமில்லை!

மேலும் ஐசிசி இன்னொரு புதிய விதிமுறையையும் அறிவித்துள்ளது. அதாவது, ஆணுக்குரிய தன்மையை கொண்ட ஒருவர் ஹார்மோன் மாற்றம் சிகிக்சை மூலம் திருநங்கையாக மாறினால் சர்வதேச அளவில் மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாட அனுமதியில்லை என ஐசிசி அறிவித்துள்ளது.

டேனியல் மெக்காஹே
டேனியல் மெக்காஹே

இதனால் ஏற்கனவே கனடாவில் பிறந்து தென் அமெரிக்கா கிரிக்கெட் சாம்பியன் ஆன டேனியல் மெக்காஹே, இனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com