ஐசிசி உலககோப்பை போட்டி: நவீன் உல் ஹக்கை மறக்காத விராட் ரசிகர்கள்!

நவீன் உல் ஹக்
நவீன் உல் ஹக்

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றிப்பெறும் என்பதை ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் மீதே இந்திய ரசிகர்களின் பார்வை குவிந்துள்ளது.

குறிப்பாக ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் பெயரை எக்ஸ் தளத்தில் ட்ரெண்டு செய்துள்ளனர் இந்திய வீரர் விராட் கோலியின் ரசிகர்கள். இதற்கு காரணம், கடந்த 2023 ம் ஆண்டு நடந்த IPL தொடரின்போது பெங்களூரு மற்றும் லக்னோ இடையேயான போட்டி நடந்தது. அந்த ஆட்டத்தின் முடிவில் கோலிக்கும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீனுக்கும் பெரும் வாக்குவதம் ஏற்பட்டது அதில் கவுத்தம் கம்பீரும் இணைந்துக் கொண்டார்.

இந்த சண்டை சமூக வளைத்தலங்கள் வரை காரசாரமாக சென்றது. அதிலிருந்து எப்போது நவீன் மைதானத்தில் இறங்கினாலும் கோலி என்று கோஷமிட்டு கோலி ரசிகர்கள் தனது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். ஐசிசி உலககோப்பையின் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷை எதிர்த்து ஆப்கானிஸ்தான் ஆடியதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வென்றது. இப்போட்டியின்போது எல்லையில் ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்த நவீனைப் பார்த்து அரங்கத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் ”கோலி, கோலி” என்று கோஷம் போடத்தொடங்கினர்.

Virat and Naveen
Virat and Naveen

இன்று நடைபெற்றுவரும் போட்டி கோலியின் சொந்த ஊரான டெல்லியில் நடக்கவுள்ள நிலையில் மற்ற இடங்களை விட கோலி ரசிகர்கள் அதிகாமகவே இருப்பர்கள். IPL போட்டிக்கு பின்னர் மீண்டும் இன்று நடக்கவிருக்கும் போட்டியில்தான் கோலியும் நவீனும் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளனர். எனவே, இன்று அருண் ஜெட்லீ மைதானத்தில் நடக்கவிருக்கும் போட்டியை விட இதற்குதான் ரசிகர்களின் ஆராவாரமும் கோஷமும் பெரும் அலப்பரையாக இருக்கும் என கருதப்படுகிறது.

மேலும் இதைப்பற்றி பேட்டி ஒன்றில் பேசிய ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் சாஹிதி” இந்தியா எங்கள் வீடு ,இந்திய மக்கள் எங்களுக்கு அன்பை அள்ளி வழங்குகிறார்கள். மைதானத்தில் நடப்பதெல்லாம் விளையாட்டு மீதான வெறியில்தான் மற்றப்படி இது இரண்டு நாடுகளுக்குமான பிரச்சனையல்ல. எங்கள் வீரர்கள் இந்திய வீரர்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் தான் ஆகையால் எங்களுக்கு யார் என்ன பேசினாலும் கவலையில்லை.

ஐசிசி முதல் போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்ததால் நாங்கள் தளரமாட்டோம். இது ஒரு பெரிய தொடர். இன்னும் போட்டிகள் இருக்கிறது. ஆகையால் மற்றதை பற்றி எண்ணிக்கொண்டு கவலைப்பட எங்களுக்கு நேரமில்லை.” என்று திட்டவட்டமாக பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com