இந்தியா ஆஸ்திரேலியா போட்டியின் ஆட்ட நாயகன் கே.எல்.ராகுல்.. இவரை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க!

K L RAHUL
K L RAHUL
Published on

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐசிசி உலககோப்பையின் ஐந்தாவது போட்டியில் ஐந்து முறை கிரிக்கெட் உலககோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியை முதல் போட்டியிலேயே வென்று தனது இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.

நேற்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த நிலையில் ஜடேஜா 28 ரன்களிலையே மூன்று விக்கட்டுகளை எடுத்து இலக்கை குறைக்க உதவி செய்தார். அதேபோல் இந்திய அணியின் ஓப்பனராக களமிறங்கிய ரோஹித் மற்றும் இஷான் கிஷான் டக் அவுட் ஆனதை அடுத்து கோலியும் ஸ்ரேயஸ் ஐயரும் களமிறங்கினர்.

ஆனால் ஹசெல் வுட் இரண்டு பந்துகளில் ரன் கொடுக்காமல் மூன்றாவது பந்திலையே ஸ்ரேயஸ் விக்கெட்டை எடுத்தார். தொடர்ந்து மூன்று டக் அவுட் என்ற நிலையில் இந்தியா படும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து கே.எல்.ராகுல் களமிறங்கினார். போட்டி தொடங்கும் முன்னர் கோலியின் அறிவுரைக்கேற்ப போட்டியை மிக மிக பொறுமையாக எடுத்துகொண்டு சென்றார் ராகுல்.

ஆனால் அது இந்திய ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது .பிறகுத்தான் ஆட்டம் படிபடியாக முன்னேறத் தொடங்கியது. கோலியின் கேட்ச்சை கைக்கு வந்தும் ஆஸ்திரேலியா அணி விட்டது இந்திய அணிக்கு பெரும் சாதகமாக அமைந்தது. இந்நிலையில்தான் கோலி 116 பந்துகளுக்கு 85 ரன்கள் எடுத்தது இந்திய அணிக்கு வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை அளித்தது. அதன்தொடர்ச்சியாக ராகுல் ஒரு ஓவரில் பவுண்டிரிகளை நோக்கி மூன்று முறை நான்கு ரன்களை அடித்து அசத்தினார்.

இதன்பின்னர், கோலி அவுட் ஆன பிறகு ராகுலும் பாண்டியாவும் விளையாடினர் . ராகுல் 97 ரன்கள் எடுத்த நிலையில் எப்படியாவது சதம் அடிக்க நினைத்தார் ஆனால் அதற்குள் இந்திய அணி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது ராகுலுக்கு சந்தோஷத்திலும் சிறு ஏமாற்றமே தந்தது.

இந்தியா முதல் முறையாக ஏற்று நடத்தும் ஆடவருக்கான ஐசிசி உலககோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தை சென்னையில் ஆஸ்திரேலியாவுடன் எதிர்க்கொண்ட இந்திய அணி ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் போட்டியின் ஆட்ட நாயகன் விருதைப்பெற்ற கே.எல்.ராகுல்தான்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கிய ராகுல் 115 பந்துகளில் பவுண்டிரிகளை நோக்கி 8 நான்கு ரன்களையும் இரண்டு சிக்ஸ்சர்களை விளாசி மொத்தம் 97 ரன்களை குவித்தார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ராகுல், தன்னுடைய 10 வயதிலேயே கிரிக்கெட் மட்டையை பிடிக்கத் தொடங்கிவிட்டார். இவரின் தந்தை லோகேஷ் கர்நாடகா தேசிய தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர், தாய் ராஜேஸ்வரி மங்களூர் பல்கலைக்கழக பேராசிரியர். ராகுலின் தந்தை ஒரு கிரிக்கெட் பிரியர் என்பதை தன்னுடைய மகனுக்கு சிறுவயதிலேயே கிரிக்கெட் விளையாட்டு மீதான ஆர்வத்தை வளர்த்தார். இதனைத்தொடர்ந்து 10 வயதில் கிரிக்கெட் கிளப்பில் ராகுலை கிரிக்கெட் பயிற்சிக்கு சேர்த்தார். 12 வயதில் இருந்தே பெங்களூர் கிரிக்கெட் கிளப்பிற்காக விளையாடிவரும் ராகுல் வலது கை ஆட்டக்காரர் ஆவார்.

இவர் 19 வயதுக்கு உட்பட்வர்களுக்கான உலககோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார். IPL போட்டியைப் பொருத்தவரை 2013 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காகவும் 2014 ல் சன்ரைஸ் ஹைத்ராபாத் அணிக்காகவும் அதன்பின்னர் 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காகவும் விளையாடினார். தற்போது 2022 லிருந்து லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார்.

K L RAHUL
K L RAHUL

2014ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் அணியில் இணைந்த கே.எல்.ராகுல் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாபேவை எதிர்த்து ஆடினார். அதேபோல், தனது முதல் டி20 போட்டியை 2016 ஆம் ஆண்டு ஜிம்பாபேவை எதிர்த்து ஆடினார்.

இதுவரை 118 IPL போட்டிகளில் 4,163 ரன்கள் எடுத்துள்ளார் கே.எல்.ராகுல். அதேபோல், 62 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2 ஆயிரத்தி 265 ரன்களும் 47 டெஸ்ட் போட்டிகளில் 2 ஆயிரத்தில் 642 ரன்களும் மற்றும் 72 டி20 போட்டிகளில் 2,265 ரன்கள் எடுத்துள்ளார். தனது சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள கே.எல்.ராகுல் அதனை தனது முதல் உலககோப்பை போட்டியிலேயே நிரூபித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com