பாகிஸ்தான் கிரிக்கெட் டீம்
பாகிஸ்தான் கிரிக்கெட் டீம்

பாகிஸ்தான் அணியின் பலவீனம் இதுதானா? அரையிறுதி வாய்ப்பு அவ்வளவுதானா?

லககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விக்கு காரணம் அந்த அணி வீரர் பாபர் அசாமின் கேப்டன்ஸி சரியில்லை என்று பல்வேறு கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். அது ஏன்? பாகிஸ்தான் அணி வெற்றிக்கான வழி என்ன ? என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளிலுமே எதிரணியை சுலபமாக வென்றது. இதை கருத்தில் கொண்டு கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் அணி ”இம்முறை நல்ல ஃபாமில் தான் உள்ளது. சுவாரசியாமான போட்டிகளை பாகிஸ்தானிடமிருந்து எதிர்ப்பார்க்கலாம்.” என்று நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் அந்த நம்பிக்கை மூன்றாவது போட்டிக்கே முற்றுப்புள்ளி வைத்தது. அடுத்த மூன்று போட்டிகளிலையுமே தொடர்ச்சியாக எதிர்ப்பார்க்காத அளவிற்கு மோசமான தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி.

கிரிக்கெட் நிபுணர்களின் புலம்பல்:

இந்த தொடர் தோல்விகளுக்கு கிரிக்கெட் நிபுணர்கள் பல கருத்துகளை கூறி வருகின்றனர். அதிலும் கடைசியாக சென்னை சேப்பாக்கத்தி நடந்த ஆப்கானிஸ்தான் எதிரான தோல்வியை பாகிஸ்தான் முன்னாள் வீர்ரகளால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த தோல்விக்கு காரணம் பவுலிங் லைன் அப் என்றுத்தான் அனைத்து கிரிக்கெட் நிபுணர்களுமே கூறுகின்றனர்.

அக்டோபர் 14ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் இந்தியாவிற்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு காரணம் பாபர் அசாம் கேப்டன்ஸி தான் என்று பலரும் கூறினார்கள். அவரை உடனே கேப்டன்ஸி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் ஸ்பின்னர் சோயிப் மாலிக் கூறினார். அதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினர் பாபர் அசாம் சரியான ஆட்களை சரியான நேரங்களில் பந்து வீசு வைக்காதது தான் பாகிஸ்தான் அணி தோல்விக்கு காரணம் என்று கூறினார்கள்.

எதிரணிக்கு எளிதானது வேகப்பந்து வீசு:

பாகிஸ்தான் அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் டெக்னிக்கலாக எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர். கடைசியாக பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொண்டு தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 ஸ்பின்னர்களை இறக்கியது.ஆனால் பாகிஸ்தான் அணி வெறும் இரண்டு ஸ்பின்னர்களையே இறக்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சேப்பாக்கம் மைதானத்தில் குறுகிய நீளத்தில் பந்து போட்டால் அதிக ரன்கள் தரும் என்பது பிட்ச்சின் ரிப்போர்ட். ஆனால் பாகிஸ்தான் பவுலர் ஷதாப் கான் மீண்டும் மீண்டும் குறுகிய நீளத்திலேயே பந்தை வீசினார். அதைப்பற்றி கேப்டன் அசாம் கூட அவருக்கு சொல்லவில்லை. பார்ட் டைம் பவுலர் இப்திகார் அஹமத் கூட அதை புரிந்துக்கொண்டு பந்து வீசி எதிரணியின் ரன்களை குறைத்தார்.

இந்திய மைதானங்களின் பிட்சில் அதிக வேகமாக பவுலிங் செய்தால் பேட்ஸ்மேன்ஸ் தூக்கி விளாசுவார்கள் என்பது உலக கிரிக்கெட் விளையாடும் அனைத்து வீரர்களுக்குமே தெரிந்த ஒன்று. ஆனால் ஹாரிஸ் ராஃப் லைன், லெங்த்தில் கவனத்தை செலுத்தாமல் வேகமாக பந்தை வீசுவதிலே குறியாக இருந்தார். இது எதிரணியின் ரன் ரேட் அதிகரிப்பதற்கு சாதகமாக அமைந்தது. முதல் ஓவரிலையே இப்படி பந்து வீசி அதிக ரன்கள் கொடுத்து எதிரணிக்கு அழுத்தம் தராமல் எளிதாக அவர்கள் வெற்றியடைய வழி ஏற்படுத்தி தருகின்றது பாகிஸ்தான் அணி பவுலர்கள்.

இனி வரும் போட்டிகளில் பாகிஸ்தான் அணி பவுலிங்கில் கவனத்துடன் விளையாடினால் மட்டுமே வெற்றிபெற இயலும். நடைபெறவிருக்கும் நான்கு போட்டிகளில் அனைத்திலும் வெற்றிபெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com