இந்திய அணி
இந்திய அணி

ஐசிசி உலககோப்பை அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி!

லககோப்பை தொடரில் ஏழு போட்டிகளிலும் வெற்றிபெற்று முதல் அணியாக அரையிறுதி போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது இந்திய அணி.

ஐசிசி உலககோப்பையின் 33வது போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நடந்தது. இப்போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.

இந்திய அணியில் முதலில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி களமிறங்கினார்கள். முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரோஹித் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய சுப்மன் கில்லுடன் கோலி சேர்ந்து நல்ல ஸ்கோரை அடித்தனர். சுப்மன் கில் 92 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல் விராட் கோலி 94 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து இந்த உலககோப்பை தொடரில் மூன்றாவது முறையாகச் சதத்தைத் தவறவிட்டார்.

ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 56 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்து 82 ரன்கள் குவித்தார். இந்திய அணி ஆட்டத்தின் முடிவில் 358 ரன்கள் இலக்காக இலங்கை அணிக்கு கொடுத்தது.

இலங்கை அணி எதிர்பார்த்த அளவிற்கும் மிக மோசமாக விளையாடியது. இந்திய வீரர் பூம்ராவின் முதல் பந்திலேயே நிஷாங்கா அவுட் ஆனார். அடுத்து வந்த கருணாரத்னே மற்றும் சமரவிக்ரம அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் ஷமி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் ஆனார். சிராஜ் மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். இலங்கை அணி 19.4 ஓவர்களிலையே 55 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையுமே இழந்தனர்.

போட்டி முடிவில் இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் அணியின் தோல்வி பற்றிப் பேசினார். அதில் ”முதல் பாதி போட்டியில் பந்து மெதுவாகப் போகும் என்பதால் தான் நான் பந்துவீச்சைத் தேர்வு செய்தேன். ஆனால் அதுவும் அணியின் தோல்வியும் எனக்குப் பெரிதும் ஏமாற்றம் அளித்தது. இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினார்கள். துரதிர்ஷ்டவசமாக எங்கள் அணி தோல்வி அடைந்தது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் எங்கள் அணி சிறப்பாக விளையாடி பலத்துடன் மீண்டும் வருவோம்” எனக் கூறினார்.

இந்நிலையில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஏழு போட்டிகளிலும் வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மேலும் அரையிறுதி போட்டிக்கு தனது சொந்த மண்ணில் இந்திய அணி இந்த உலககோப்பை தொடரில் முதல் அணியாக தகுதி பெற்றது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com