ஐசிசி உலககோப்பையின் 13 வது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இன்று நடைபெற உள்ளது.
அக்டோபர் 7ம் தேதி நடந்த பங்களாதேஷ் உடனான போட்டியில் நினைத்த அளவிற்கும் கம்மியாகத்தான் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. ஆனால் அக்டோபர் 11 தேதி நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 272 ரன்கள் இலக்கு கொடுத்திருந்தாலும், இந்திய அணி 273 எடுத்து வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் அணி ஒவ்வொரு போட்டிகளிலும் முன்னெறிக்கொண்டே வருகிறது என்றுதான் கூற வேண்டும்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியில் ஷஹீதி 80 ரன்களும் அஜமத்துலா 62 ரன்களும் எடுத்து அசத்தினர். இன்றைய போட்டியில் அவர்களின் பெர்ஃபாமன்ஸை எதிர்ப்பார்க்கலாம் . அதே போட்டியில் ரஷீத் கான் சரியாக பேட் செய்யவில்லை என்றாலும் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளுமே அவர்தான் எடுத்தார்.
அதேபோல் இங்கிலாந்து பொருத்தவரை இரு போட்டிகளிலுமே 250 ரன்கள் மேல் எடுத்து ஒரு டஃப் போட்டியாளர்களாகவே இருந்தாலும் பங்களாதேஷ் உடனான போட்டியில் மட்டுமே வென்றுள்ளனர். பேட்ஸ்மேன் ரூட் முதல் போட்டியில் 77 ரன்களும் இரண்டாவது போட்டியில் 82 ரன்களும் ஒரு நல்ல ஃபார்மில் தான் உள்ளார்.
மேலும் பங்களாதேஷ் உடனான போட்டியில் பேட்ஸ்மேன் மலன் 107 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். நாளைய போட்டியை பொருத்தவரை இங்கிலாந்து அணியை பேட்டிங்கில் எதிர்ப்பார்க்கலாம். பந்துவீச்சை பொருத்தவரையில் டோப்லிடமிருந்து விக்கெட்டுகளை எதிர்ப்பார்க்கலாம். டோப்லி பங்களாதேஷ் உடனான போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றும் கிறிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்.
அருண் ஜெட்லீ மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் படி துடுப்பாட்ட வீரர்களுக்கே சாதகமாக அமையும். ஆகையால் பங்களாதேஷ் அணி முன்னேற்பாடுகளோடு செல்வார்கள் என கூறப்படுகிறது. இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தில் வலுவாக உள்ளதால் பங்களாதேஷ் அணி கவனத்துடனே செயலாற்றுவர்கள் என்று கருதப்படுகிறது. இரண்டாம் இன்னிங்கில் ஃபீல்டிங் கடினமாக இருக்கும் என்று ரிப்போர்ட் கூறுகிறது. ஏறத்தாழ 238 ரன்கள் இலக்காக அமையலாம் என கருதப்படுகிறது.