
நடப்பு உலககோப்பை சேம்பியன் இங்கிலாந்தை வென்று இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்குள் செல்கிறது. இதன்மூலம் சர்வதேச உலககோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது ஐந்தாவது முறையாகும்.
உலககோப்பை 13வது லீக் மிகவும் சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் உலககோப்பை தொடர் இந்திய அணியின் கடுமையான உழைப்பிற்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பது போல் அணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இதுவரை நடந்த ஆறு போட்டிகளிலையுமே இந்திய அணி அபார வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது.
நேற்று நடந்த போட்டியில் முதலில் தடுமாறினாலும் அதன்மின் தனது பவுலிங்கால் எதிரணியை தோல்வியடைய செய்தது. நேற்று இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து வெற்றிபெற்றது.
இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிக்கு முதல் காரணம் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஸி என்றே கூறலாம். எந்த நேரத்தில் எந்த வீரரை களத்தில் இறக்குவது என்ற அந்த யுக்தி நன்றாகவே தெரிந்து வைத்து இருக்குகிறார். மேலும் போட்டிக்கு சாதகமாகவும், வீரர்களின் நிலையையும் சமமாக தெரிந்துக்கொண்டு ஆட்டத்திற்கு ஏற்றவாரு முடிவுசெய்வது அவரின் பெரிய ப்ளஸாக உள்ளது.
அடுத்த முக்கிய காரணம் இந்திய அணி வீரர்களே. போட்டியின் போக்கை உணர்ந்துக்கொண்டு ரிஸ்க் எடுக்கலாமா? இல்லை எளிதாக கொண்டுபோனாலே வெற்றி அடையலாமா? என்று தெளிவாக கொண்டு செல்கிறார்கள். அதற்கு ஒரு உதாரணம் விராட் கோலி. போட்டி இந்திய அணியின் கைவிட்டு போகும்படி இருந்தால், எப்படியாவது முயற்சித்து சதம் அடிக்கிறார். இதுவே போட்டி எப்படியும் நமது கைவசம் என்றால் டக் அவுட்டும் ஆகிறார். இதன்மூலம் உலககோப்பை தொடரில் முதல் முறையாக விராட் கோலி டக் அவுட் ஆகியிருப்பது பேசுப்பொருளாக மாறியுள்ளது.
இதுபோன்று தன் தனிப்பட்ட பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு கோட்டைவிடாமல், ஒரு அணியாக செயல்பட்டு அணியை வெற்றிபெற செய்கின்றனர் இந்திய அணி வீரர்கள். இந்திய அணியின் வெற்றியே வீரர்களின் தனிப்பட்ட (அதிக ரன்கள் போன்ற பட்டங்கள்) சாதனைக்கும் அடித்தளமாக உள்ளது.
உலககோப்பை தொடரில் தனது சிறந்த விளையாட்டால் இந்திய அணி இதுவரை நான்கு முறை அரையிறுதிக்கு சென்றது. முதல்முறையாக அரையிறுதியில் 1987ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி தோல்வியை சந்தித்தது. அதன்பின்னர் 1996ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியிலும் அரையிறுதிக்கு சென்று தோல்வியையே சந்தித்தது.
2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அரையிறுதிக்கு சென்று தோல்வியடைந்தது. 2019ம் ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலியா உடனான போட்டியில் அரையிறுதியில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பெற்றது. இதையடுத்து ஐந்தாவது முறையாக இந்த ஆண்டு உலககோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்குள் செல்கிறது இந்திய அணி.
அதேபோல் 1983ம் ஆண்டு இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2003ம் ஆண்டு ஆஸ்திரேலியா உடனான போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பிறகு 2011ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி உலககோப்பை தொடரில் மீண்டும் வெற்றியைபெற்றது.
இதனையடுத்து நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி பலமான அணியாக இருந்து வருகிறது. அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய அணி சொந்த மண்ணில் இறுதி போட்டியில் வெற்றிபெறுமா என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பாக அமைந்துள்ளது.