இந்திய அணி உலககோப்பையில் தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

இந்திய அணி உலககோப்பையில் தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

லககோப்பை தொடரில் இன்று இலங்கை மற்றும் இந்தியா இடையே நடைபெறவுள்ள போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிசெய்யுமா என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவுள்ளது.

ஐசிசி உலககோப்பை தொடரின் 33வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கேடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த வான்கேடே மைதானத்தை நிச்சயம் இந்திய ரசிகர்களால் மறக்கவே முடியாதது. இதே மைதானத்தில் தான் 2011ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் ஐசிசி உலககோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடியது. இப்போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை தோல்வியடையச் செய்தது. மீண்டும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் அதே வான்கேடே மைதானத்தில் மோதவுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. ஆனால் இந்திய அணியில் 2011ம் ஆண்டு இருந்த வீரர்களில் விராட் கோலி மற்றும் அஸ்வின் மட்டுமே இன்றைய போட்டியில் உள்ளனர்.

இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவும், ஷமியும் அணியில் இருப்பார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்ரேயாஸ் ஐயர் இன்றைய போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றால் அடுத்த போட்டியில் இருப்பாரா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் அடுத்த போட்டியில் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய ஹார்திக் பாண்டியா மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் இன்று சரியாக விளையாடி இடத்தை தக்கவைத்துக்கொள்ளவில்லை என்றால் அடுத்த போட்டியில் அவரை அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

இலங்கை அணி எப்போது எப்படி விளையாடும் என்பதை யாராலுமே கணிக்கமுடியாது. இன்றைய போட்டியில் இலங்கை அணியில் ஆஞ்சிலோ மேத்தீவ்ஸ் அணிக்குத் திரும்பியிருக்கிறார். இவர் இந்தியாவிற்கு எதிராக விளையாடிய மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்திருக்கிறார். மேலும் ரோஹித் ஷர்மாவை ஏழு முறை பந்துவீச்சில் ஆட்டமிழக்க வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
அறிமுக ஆட்டத்திலேயே அணிக்கு தூணாக இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்கள்!
இந்திய அணி உலககோப்பையில் தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

இந்திய அணி இதுவரை நடந்த ஆறு போட்டிகளிலுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோல் இலங்கை அணி ஆறு போட்டிகளில் 2 போட்டிகள் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். ஆனால் இலங்கை அணிக்கு இதுவொரு வாழ்வா சாவா என்ற போட்டியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com