ஐசிசி உலககோப்பை தரவரிசையில் முதலிடம் பிடிக்குமா இந்தியா?

ICC Points Table
ICC Points Table
Published on

சிசி உலககோப்பையில் மூன்றாம் சுற்றில் வென்று தரவரிசையில் முதலிடம் பிடிக்குமா இந்தியா? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐசிசி உலககோப்பைத் தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடர்ந்து மிக சுவாரசியமாக நடந்துவருகிறது. உலககோப்பையின் மூன்றாவது சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் விளையாடிவருகிறது.

விதிப்படி அரை இறுதிக்கு முன்னர் அதுவரை நடந்த போட்டிகளில் எந்த அணி அதிகாமாக வெற்றிபெறுகிறதோ அதுவே தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கும். மேலும், தரவரிசையில் முதல் நான்கு அணிகளே அரை இறுதி போட்டிற்கு முன்னேறுவர். வெற்றி கணக்குகள்படிதான் அணிகள் தரவரிசையில் வரிசையாக இடம் பிடிக்கும். ஒருவேளை பட்டியலில் எதாவது இரு அணிகள் ஒரே வெற்றி விகிதத்தில் இருந்தால் முழு ரன்கள் மற்றும் பெர்ஃபாமன்ஸ் அடிப்படையில் பட்டியலிடுவர். ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். மேலும் பெர்ஃபாமன்ஸிற்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.

நடப்பு ஆண்டு உலககோப்பையில் இதுவரை இந்தியா இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலுமே வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் இரண்டு போட்டிகள் விளையாடி இரண்டிலுமே வெற்றிபெற்றுள்ளது. நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த மூன்றாம் சுற்றில் மோதிய நியூசிலாந்து பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது.

ஏற்கனவே இரண்டு போட்டிகளிலுமே வெற்றிபெற்ற நிலையில் எந்த தோல்வி கணக்கும் இல்லாமல் தரவரிசையின் முதல் இடத்தில் உள்ளது நியூசிலாந்து அணி. ஆனால் பங்களாதேஷ் மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று தரவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து பங்களாதேஷ் அணியில் யார் தரவரிசையில் முதலிடம் பிடிப்பர் என்பது ஆட்டத்திற்கு முன்பே தெரிந்த விஷயம் என்பதால் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் போட்டி நடபெற்றது. ஆனால் இன்று நேருக்கு நேர் மோதும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இருவருமே சமபலத்தில் உள்ளனர். ஆகையால் இன்றைய போட்டியில் யார் வெற்றியாளரோ அவர்களே பட்டியலில் முதல் இடம் பிடித்து நியூசிலாந்து அணிக்கு சமமாக இருப்பர்.

இதுவரை நியூசிலாந்து,தென்னாப்பிரிக்கா, இந்தியா,பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் மட்டுமே எந்த தோல்வியும் இல்லாமல் விளையாடி வருகிறது. இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளனர். இலங்கை, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் எந்த போட்டியிலும் வெற்றிப்பெறவில்லை.

கடந்த 2019ம் ஆண்டு இந்தியா 9 போட்டிகளில் 7 போட்டிகள் வென்று 14 புள்ளிகள் வென்றது. மேலும் பெர்ஃபாமன்ஸிற்கு ஒரு புள்ளி என மொத்தம் 15 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருந்தது. ஆனால், அந்த ஆண்டு இந்திய அணி அரையிறுதி போட்டிவரை மட்டுமே முன்னேறிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி 2019ம் ஆண்டுக்கான உலக கோப்பையை வென்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com